திமிறி எழும் எடப்பாடி பழனிசாமி.. இப்படி ஒரு பிளானா.. "புள்ளி" வைக்க போவது யார்.. ரெடியாகும் பாஜக?
பாஜகவை கழட்டிவிட்டு எடப்பாடி பழனிசாமி தனித்து களமிறங்க பிளான் செய்கிறாரா
சென்னை: தமிழக அரசியலில் தினம் தினம் புயல் அடித்து கொண்டிருக்க, தனித்து போட்டியிடலாமா என்று இரு பெரும் கட்சிகள் யோசனையில் ஆழ்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழக பாஜகவை பொறுத்தவரை, தனித்து போட்டியிட்ட வரலாறு கிடையாது.. திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தே தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அதேசமயம், அந்த பலவீனத்தை வெளிக்காட்டிக் கொள்வதும் இல்லை.. அதிமுகவுக்கு தங்கள் பிரச்சனையை சமாளிக்கவே நேரம் போதவில்லை என்பதால், இதை பாஜகவும் சரியாக பயன்படுத்தி கொண்டு வருவதுடன், கட்சியும் வளர ஆரம்பித்துவிட்டது..
இதனிடையே, அதிமுக விவகாரங்களில் மேலிட தலைவர்கள் தலையிடாமல் ஒதுங்கிவிட்டதால், இதற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மெஜாரிட்டி
எடப்பாடிக்கு மெஜாரிட்டியான ஆதரவுகள் இருப்பதை மேலிட தலைவர்கள் அவ்வளவாக விரும்பவில்லையாம்.. அதுமட்டுமல்லாமல், பாஜகவை தொடர்ந்து எரிச்சலூட்டும் விஷயங்களில் எடப்பாடி இறங்கி வருவதால், இதுவும் டெல்லி தலைவர்களை கடுப்பாக்கி உள்ளது.. எனவே, இந்த முறை தனித்து போட்டியிடலாமா என்ற யோசனையிலும் பாஜக கடந்த சில நாட்களாகவே இறங்கி உள்ளதாக தெரிகிறது.. இதற்கு சில அரசியல் கணக்குகளும் சொல்லப்படுகின்றன..

டிடிவி தினகரன்
இதற்கு முன்பு, அதிமுக கூட்டணியில் இல்லாமல் 3வது அணி அமைத்து போட்டியிட்டாலோ அல்லது திமுக அணியில் இருந்தாலோ எம்பி தேர்தல்களில் பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளது.. ஆனால் இதுவே, அதிமுக கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்தித்தால், சொற்ப இடம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது.. அப்படியே ஒருசில இடங்கள் ஒதுக்கினாலும், ஒற்றை இடத்தில் வெற்றி பெறுவதே பெரும் சிரமமாகி விடுகிறது.. அதனால்தான், தனித்து போட்டியிடலாமா என்ற யோசனையில் பாஜக உள்ளதாம்.. வேண்டுமானால், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆதரவுடன் தேர்தலை சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
Recommended Video

ஸ்பெஷல் அட்வைஸ்
கடந்த வாரம் பிரதமர் மோடி, பாஜக நிர்வாகிகளிடம் ஆலோசித்தபோதும்கூட, "எத்தனையோ முறை தமிழகம் வந்திருக்கிறேன். ஆனால், சமீபகாலமாக தமிழக மக்களிடம் பெரும் மாற்றத்தை பார்க்கிறேன்... அவர்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளனர்.. அதை உணர்ந்து கட்சிப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். திமுக என்பது சித்தாந்த ரீதியாக பாஜகவுக்கு எதிரான கட்சி... அதனால் திமுகவை நாம் எதிர்க்கும்போது, அது, தமிழ் மொழி, கலாசாரத்திற்கு எதிரான கட்சி என்பதுபோல மக்களிடம் சென்று சேர்ந்து விடக் கூடாது.. இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்"என்ற ஸ்பெஷல் அட்வைஸ் தந்துவிட்டு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

பச்சைக்கொடி
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, பாஜகவை கழட்டிவிட முன்னமேயே முடிவெடுத்துவிட்டதாக கூறுகிறார்கள்.. அப்படியே பாஜகவுடன், சமாதானமாக தான் சென்றாலும், தன்னுடைய அணியில் இருக்கும் சிவி சண்முகம், ஜெயக்குமார், கேபி முனுசாமி இவர்கள் எல்லாம் பாஜகவை கடுமையாக எதிர்த்தும் வருவதால், இவர்களையும் ஒருகட்டத்துக்கு மேல் சமாளிக்க முடியாது என்பதையும் எடப்பாடி உணர்ந்துள்ளாராம்.. அதேபோல, ஓபிஎஸ்ஸுக்கு எந்நேரமும் டெல்லி, பச்சை கொடி காட்டிவிடும் என்பதை எடப்பாடி அறியாமல் இல்லை.. அதனால்தான், காங்கிரசுடனான நெருக்கத்தை வேண்டுமென்றே அதிகரித்து காட்டியதாகவும் தெரிகிறது.

மெஜாரிட்டி
அதேபோல இன்னொரு தகவலும் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. இப்போது நீதிமன்ற நடவடிக்கைகளை பொறுத்தவரை, ஹைகோர்ட் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தது மட்டும்தான் ஓரளவு கேள்விக்குறியாகியுள்ளது.. மற்றபடி, பிற வழக்குகளில் சாதகமான உத்தரவுகள் மட்டுமே வந்துள்ளது.. போதாக்குறைக்கு ஆதிமுக அலுவலகம், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என மெஜாரிட்டி ஆதரவுகள் இவ்வளவும் தன்பக்கம் இருக்கும்போது, பாஜகவை ஏன் தோளில் தூக்கி சுமக்க வேண்டும் என்றும் எடப்பாடி டீம் யோசிக்கிறதாம்..

புள்ளி
எல்லாவற்றிற்கும் மேலாக, பொதுக்குழுவில் தற்காலி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாஜக தலைவர்கள் யாருமே இதுவரை வாழ்த்து சொல்லவில்லை.. தங்கள் கருத்துக்களிலும் அந்த பதவியை குறிப்பிடுவதில்லை.. தேர்தல் கணக்கு இப்படியாக இருந்தாலும், வழக்கு, விசாரணைகள், ரெய்டுகளில் இருந்தெல்லாம் பாஜகவை முழுமையாக, எடப்பாடி டீம் சமாளிக்குமா அல்லது 90 சதவீத ஆதரவை பெற்றுள்ள எடப்பாடியை, பாஜக நிஜமாகவே கழட்டிவிட்டு தேர்தலை சந்திக்குமா? 3வது அணியை ஆரம்பிப்பதற்கான புள்ளியை வைக்க போவது யார்? என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.. இதற்கு இனி வரும் நாட்களிலும் விடை கிடைக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications