அந்த கடைசி நொடி.. கமலுக்கு "கை" கொடுத்த ஸ்டாலின்.. உதயசூரியனுடன் ஐக்கியமான "டார்ச்".. ஆட்டம் ஆரம்பம்
சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானால்தான், தன்னுடைய ரூட்டும் கிளியர் ஆகும் என்று மக்கள் நீதி மய்யம் நம்பிக் கொண்டிருந்த நிலையில், மொத்த கணிப்பும் நொறுங்கி விழுந்துவிடும் போலாகிவிட்டது. இறுதியில், கமலுக்கு 1 சீட் தந்து கூட்டணியை உறுதி செய்துள்ளது திமுக..
மக்கள் நீதி மய்யம், திமுக கூட்டணியில் இணைய முயற்சித்து வருகிறது. ஆனால், சீட் விவகாரத்தில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.. தொடர்ந்து காத்திருக்கும் சூழலுக்கு ஆளாகி உள்ளது.

திமுக - மய்யம் தரப்பில் மறைமுகமான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் கமலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெளிப்படையாகவே சொல்லியிருந்தார்.
எனவே, வெளிநாட்டு பயணம் முடிந்து, சென்னை திரும்பியதுமே கமல்ஹாசன் சந்தித்து முதல்வர் பேச இருப்பதாக சொன்னார்கள். ஆனால், கமலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
அதிருப்தி: பிறகு, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, நேற்று முன்தினமே அண்ணா அறிவாலயம் செல்லவிருப்பதாக தகவல் வெளியானது.. எனவே, மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள், வெளியூர் செல்லாமல் சென்னையிலேயே இருந்தனர். ஆனால், கடைசிவரை பேச்சுவார்த்தைக்கு கமலை திமுக அழைக்கவில்லை.. அதனால்தான், மூத்த தலைவர் கே.என்.நேருவை போனில் அழைத்து பேசினாராம் கமல்.
அதற்கு நேரு, "கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, சிறுத்தைகள் கட்சிகளுக்கான தொகுதிகளை முடித்துவிட்டு உங்களிடம் பேசலாம்னு தலைவர் சொல்லியிருக்கார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. ஞாயிற்றுக்கிழமைக்குள் அறிவாலயத்தில் நீங்கள் இருப்பீர்கள்" என்று கமலிடம் உறுதி தந்தாராம்.. இதைக்கேட்டு கமலும், ஞாயிறுவரை அமைதி காப்போம் என்று நினைத்தார்.
சுமூக முடிவு: இந்நிலையில், நேற்றைய தினம், மதிமுக, விசிக கூட்டணி உடன்பாடு திமுகவிடம் ஏற்பட்டுவிட்டது. நாளைய தினம் அதாவது 10ம் தேதி காங்கிரசுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மாலையே காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு முடிவடைந்துவிடும் என்கிறார்கள்.
காரணம், காங்கிரசுக்கு புதுச்சேரி உட்பட 10 சீட்டுகளை ஒதுக்க திமுக தரப்பு ஓகே சொல்லிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இன்று மாலையே கூட்டணி ஒப்பந்தமும் கையெழுத்தாக போகிறதாம்.
அதிர்ச்சி: ஆனால், 10 சீட்டுக்களிலுமே காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது மய்யத்துக்கு பெருத்த அதிர்ச்சியை தந்துவிடக்கூடும் என்கிறார்கள்.
காரணம், திமுக தரப்பில் கமலுக்கு 1 சீட் மட்டுமே என்று ஏற்கனவே முடிவாகியிருந்ததாம். அதனால், காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளிலேயே, கமலுக்கும் 1 சீட் ஒதுக்கப்படும் என்றார்கள்.
கமல்ஹாசன்: அதுவும் இல்லாமல், கமல்ஹாசனை பொறுத்தவரையில் காங்கிரஸ் டெல்லி மேலிட தலைவர்கள் மற்றும் ராகுல்காந்தியுடன் மிகவும் நெருக்கமாகவே இருந்து வருவதால், மேலிடத்தில் பேசி தனக்கு தேவையான தொகுதிகளை கேட்டு பெற்றுக்கொள்வார் என்றே கணிக்கப்பட்டது.
ஆனால், இத்தனை நாளும், 10 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு வந்த நிலையில், திமுகவோ 6 தொகுதிகளை மட்டுமே தருவதாக கூறிவந்தது.. தங்களுக்கே குறைவான தொகுதிகளை திமுக ஒதுக்கும்பட்சத்தில், அதில் ஒரு தொகுதியை கமல்ஹாசனுக்கு எப்படி ஒதுக்க முடியும் என்று காங்கிரஸ் கையை பிசைந்து நின்றது.
10 சீட்டுக்கள்: இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 10 சீட்டுக்களை லட்டு போல தூக்கி, திமுக தருவதாகவும், அந்த 10 தொகுதிகளிலுமே காங்கிரஸ் போட்டியிட போவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. அப்படியானால், கமலுக்கு 1 சீட்டை தருவதற்கு திமுக முன்வருமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது..
இந்நிலையில், சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அப்போது, இந்த தேர்தலில் திமுக., கூட்டணியை ஆதரித்து கமல் பிரச்சாரம் செய்வது என்றும், வரும் 2025ம் ஆண்டில் நடக்கும் ராஜ்யசபா சீட் மக்கள் நீதி மய்யத்திற்கு வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தமும் கையெழுத்தானது.
-
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி!












Click it and Unblock the Notifications