விதவிதமாக டிரஸ், தினம் ஒரு நாடு.. 2 போதையில் மோடி.. வைகோ கடும் தாக்கு
5 நிமிடம் விவசாயிகளிடம் மோடிக்கு பேச முடியாதா என வைகோ கேட்டுள்ளார்.
சென்னை: விதவிதமாக டிரஸ் போடுவது, தினம் ஒரு நாட்டிற்கு போவது என்று 2 போதைகள் மோடிக்கு உள்ளன என்று வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.
இலக்கிய விழா ஒன்று சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது கவிஞர் ரமணனுக்கு, எழுத்தாளர் சிவசங்கரி வழங்கும் இலக்கியப்பீடம்-சிவசங்கரி விருது மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கான பொற்கிழி ஆகியவற்றை வழங்கினார்.

4 மாத போராட்டம்
விழா முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது: "லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். 4 மாதமாக மழை, வெயில், பனி என்று பார்க்காமல், ரோட்டிலேயே கிடந்தார்கள்.

சாபக்கேடு
ஆனால் அவர்களை பார்க்க 5 நிமிஷம்கூட ஒதுக்காத பொறுப்பற்ற ஒரு பிரதமர் பதவியில் இருப்பது இந்த நாட்டுக்கு சாபக்கேடு. வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் மோடி கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்க்க தமிழ்நாட்டுக்கு வரவில்லை.

விதவிதமாக டிரஸ்
விதவிதமாக டிரஸ் போடுவது, தினம் ஒரு நாட்டிற்கு போவது என்று 2 போதைகள் மோடிக்கு உள்ளன. இதில் இருந்து அவர் ஒரு காலமும் வெளியில் வரமுடியாது. அவரிடம் இருந்து பதவியையும், அதிகாரத்தையும் மக்கள் பறிக்க வேண்டும்.

தென்னங்கன்றுகள்
ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தென்னங்கன்றுகள் கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டும் பொறுப்பாக கூறி உள்ளார். மக்களின் உண்மையான நிலைமையை உணர்ந்து பேசிய அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்." என்றார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications