சான்ஸே இல்லை! ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கவே முடியாது! உச்ச நீதிமன்ற நீதிபதி பாட் பளீர்
டெல்லி: ஓரினசேர்க்கை கிராமம், நகரத்திற்கு சொந்தமானது அல்ல என்று தலைமை நீதிபதி சொன்னதை ஏற்றுக்கொள்கிறேன். அதே சமயம் அவர் கூறிய மற்ற கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கவே முடியாது என்று நீதிபதி ஸ்ரீபதி ரவீந்தர பாட் தெரிவித்துள்ளார்.
ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை மே 11ஆம் தேதி விசாரணை முடிந்த பின் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ஆர்.பட், ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்து இன்று தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீபதி ரவீந்தர பாட் அளித்துள்ள தீர்ப்பில், ஓரினசேர்க்கை கிராமம், நகரத்திற்கு சொந்தமானது அல்ல என்று தலைமை நீதிபதி சொன்னதை ஏற்றுக்கொள்கிறேன். அதே சமயம் அவர் கூறிய மற்ற கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது., சட்ட பிரிவு 14 மற்றும் 15(3) மாற்றங்களை தேவைப்பட்டால் மட்டுமே சட்டம் இயற்றும் மக்கள் பிரதிநிதிகள் செய்வார்கள். அதேபோல் இந்த விவகாரத்திலும் சட்டம் இயற்றுபவர்களே நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

தன்பாலின பிரிவினர் வன்முறையை எதிர்கொள்வதில் இருந்து தடுப்பதில் மட்டுமே உச்ச நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். திருமணம் என்பது சட்டம் சார்ந்தது இல்லை. திருமணம் என்பது சட்டம், அரசு அனைத்திற்கும் அப்பாற்பட்டது. அப்படி இருக்கும் போது இங்கே தன்பாலின திருமணத்திற்கு சட்டம் இயற்ற வேண்டும் என்று நாங்கள் சொல்ல முடியாது. ஓரினச்சேர்க்கை தம்பதிகளுக்கான சட்டத்தை நீதிமன்றத்தால் உருவாக்க முடியாது. இதில் , பல அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதால் அதை நாடாளுமன்றம்தான் இதை செய்ய வேண்டும்.
யாருக்கு வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யும் உரிமை உள்ளது. ஆனால் இந்த உரிமையை எல்லாம் நீதிமன்றம் சட்டமியற்றிக்கொண்டு இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் சட்டம் உருவாக்க வேண்டும் என்று நாங்கள் சொல்ல முடியாது. ரோடு சரியில்லை என்று ஒருவர் வழக்கு போட்டால் ரோடு அடிப்படை உரிமை என்று நாம் சட்டம் இயற்ற முடியாது. அப்படித்தான் இதுவும். திருமண சட்டங்களில் சட்டம் உருவாக்க வேண்டும் என்று கோர்ட் இதற்கு முன் மத்திய அரசை வற்புறுத்தவில்லையே.
( ஓரினசேர்க்கையாளர் மீது வழக்கு போடுவதற்கு கட்டுப்பாடு! போலீசுக்கு செக் வைத்த தலைமை நீதிபதி சந்திரசூட் )
இது போன்ற விவகாரங்களில் சட்டம் இயற்றுவது என்பது முடியாது. இந்த விவகாரத்தில் சிறப்பு திருமண சட்டத்தை கொண்டு வர முடியாது. அதில் இதை சேர்த்து சட்டம் இயற்றும்படி கூற முடியாது. அதேபோல் ஒருபாலின தம்பதியினர் குழந்தைகளை தத்து எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது., என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்ரீபதி ரவீந்தர பாட் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி: தலைமை நீதிபதி சந்திரசூட் சொன்ன தீர்ப்பை மறுப்பதாக நீதிபதி பாட் தெரிவித்துள்ளார். இதில் தலைமை நீதிபதி சந்திரசூட் வழங்கிய தீர்ப்பில், இதில் மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும். இதை பற்றி ஆராய குழு அமைக்க வேண்டும். ஒரு திருநங்கை .. ஆணை திருமணம் செய்து கொள்ள முடியும். அத்தகைய திருமணம் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒரு திருநங்கை இது போல திருமணம் செய்து கொள்ள சட்டம் உள்ள போது.. திருநங்கை - திருநங்கை இடையே திருமணம்., பெண் - பெண் இடையே திருமணம் திருமணம் செய்தால் அதை சிறப்பு திருமண சட்டத்தில் திருமணம் ஒரு நிலையான மற்றும் என்றும் மாறாத அமைப்பு என கூறுவது சரியல்ல, திருமணத்தில் சீர்திருத்தங்கள் சட்டங்களால் கொண்டு வரப்பட்டுள்ளன.
சிறப்பு திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அது நாட்டை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திற்கு கொண்டுச் செல்லும். தன்பாலின நபர்களிடம் பாகுபாடு காட்ட முடியாது என்பதை இந்த நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது,. ஆண் - பெண் தம்பதிகள் மட்டுமே நல்ல பெற்றோராக இருக்க முடியும் என்று சட்டம் கருத முடியாது. இது பாகுபாடு காட்டுவதாக அமையும். எனவே தற்போது உள்ள தத்தெடுப்பு விதிமுறைகள் பல பாலின தம்பதிகளுக்கு எதிரான பாகுபாட்டிற்கான காரணமாக அமைந்துவிடும். பல பாலின தம்பதிகளுக்கு தத்தெடுப்பு வழிகளை மறுப்பது என்பது அடிப்படை உரிமை மறுப்பை சேர்ந்தது ஆகும், என்று கூறியுள்ளார். இதைத்தான் நீதிபதி பாட் மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications