40/27.. நேரமே சரியில்லயே.. டிடிவி தினகரனை விடமுடியாதே.. "அவருக்கே" போன் போட்ட எடப்பாடி..அதிரும் பாஜக
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிவு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதுபோலவே தெரிகிறது. இந்த பிளவுக்கு உண்மையிலேயே என்ன காரணம்?
"அண்ணாமலையின் பேச்சை இனியும் பொறுப்பதாக இல்லை. கூட்டணியை பொறுத்தவரை பாஜக எங்களுடன் இப்போது இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதை முடிவு செய்ய முடியும், எங்களை விமர்சிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும். அண்ணாமலை தனித்துப்போட்டியில் நோட்டாவுக்கு கீழ் தான் வாங்குவார்? என்று சொல்லிவிட்டார் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுக கருத்து: இதனால், கூட்டணி பூசல் வெடித்து கிளம்பி உள்ளது.. கட்சியின் முடிவையே தான் எப்போதும் சொல்வேன் என்று ஜெயக்குமார் கூறியிருப்பதால், எடப்பாடி பழனிசாமியின் கருத்தாகவும், ஒட்டுமொத்த அதிமுகவின் கருத்தாகவும் இது பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கேற்றார்போல், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இதுவரை அதிமுக முடிவு குறித்து வாய் திறக்கவில்லை.
அப்படியானால், கூட்டணி முறிவு உண்மைதானா? என்ற சந்தேகம் வலுத்தபடியே வருகிறது. அத்துடன், கூட்டணி முறிவுக்கு என்ன காரணம் என்ற யூகங்களும் இணையத்தில் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன. அண்ணாதுரையை அண்ணாமலை விமர்சித்ததுமே மட்டுமே காரணமில்லை என்றும், இதற்கு பின்னால் சீட் விவகார இருப்பதாகவும் கூறப்படுகிறது.
என்ன பேசினார்கள்: அதாவது, கடந்த வாரம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார்.. அப்போது 2 பேருமே கூட்டணி தொடர்பாக விவாதித்ததாக தெரிகிறது.
"நீங்கள் 20 இடங்களில் போட்டியிடுங்கள், எங்களுக்கு 20 தொகுதிகளை கொடுத்து விடுங்கள்.. இந்த இடங்களில் நாங்களும் போட்டியிட்டுக்கொண்டு கூட்டணி கட்சிகளுக்கும் பிரித்து கொடுத்து விடுகிறோம் என்று அமித்ஷா தரப்பில் கேட்டதாகவும், இதற்கு எடப்பாடி சம்மதிக்கவில்லை என்றும், கூட்டணியில் யார்-யாருக்கு எத்தனை இடங்கள்? என்பது பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம் என சொல்லி விட்டதாகவும் தகவல்கள் கசிந்தன.
பேச்சுவார்த்தைகள்: இப்போது கூட்டணி முறிந்துள்ள நிலையில், இந்த தகவல் ஓரளவு உண்மைதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. தொகுதி பங்கீடு குறித்து பேச்சு எழுந்தபோது, மூன்றில் இரண்டு பங்கு, அதிமுகவுக்கும், மூன்றில் ஒரு பங்கு பாஜகவுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்று அமித்ஷா தரப்பில் சொல்லப்பட்டதாம்..
அதாவது, 40 தொகுதிகளில், 27ல் அதிமுகவும், 13ல் பாஜகவும் போட்டியிட வேண்டும், இதில், தேனி, ராமநாதபுரம் 2 இடத்தையும் ஓபிஎஸ் தரப்புக்கு தர வேண்டும் என்றும், அதேபோல, அமமுக டிடிவி தினகரனுக்கு திருச்சியை ஒதுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் அமித்ஷா தரப்பில் சொல்லப்பட்டதாம். இதற்கு எடப்பாடி தரப்பும், பாஜக கேட்ட தொகுதிகளை தர ஒப்புக் கொண்டது என்றாலும், ஓபிஎஸ், தினகரனுக்கு சீட் என்றதுமே, உடனே மறுத்துவிட்டதாம்..
கடும் எதிர்ப்பு: இப்படி அமித்ஷா - எடப்பாடி சந்திப்பு அண்மையில் நடந்து கொண்டிருந்த நிலையில், அண்ணாவை பற்றி அண்ணாமலை சீண்டிய சம்பவத்தை எடப்பாடியின் கவனத்துக்கு ஜெயக்குமாரும் கொண்டு சென்றிருக்கிறார்..
அதற்கு எடப்பாடி, "கடுமையாக ஆட்சேபியுங்கள்' என அவருக்கு அறிவுறுத்தியதுடன், சி.வி.சண்முகத்திடமும்,
பாஜகவை நேரடியாக விமர்சிக்க வேண்டாம். தேவையானால், அண்ணாமலையை மட்டும் தனிப்பட்ட முறையில் கடுமையாக அட்டாக் பண்ணுங்கள் என்றும் கேட்டுக்கொண்டாராம் எடப்பாடி.
சபாஷ் பேச்சு: அதனால்தான் சி.வி சண்முகம், அண்ணாமலையை கொந்தளித்து பேசியிருந்தாராம். இறுதியில் கூட்டணியில் பாஜக இல்லை என்றே அறிவித்துவிட்டார் ஜெயக்குமார். டிவி பேட்டிகளில் ஜெயக்குமார் பேசுவதை பார்த்த எடப்பாடி பழனிசாமியும், உடனே ஜெயகுமாரை போனில் அழைத்து பாராட்டவும் செய்தாராம்.
ஆக, கூட்டணி விஷயத்தை பொறுத்தவரை, பாஜக தலைமையில் இருந்து தன்னிடம் பேசுவார்கள் என்று எடப்பாடி காத்து கொண்டிருக்கிறாராம். அப்படியே பேசினாலும், அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்தால் கூட்டணி கிடையாது என்பதை தெளிவாக சொல்லவும் காத்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
ஆடு மேய்க்க விட்டு: மற்றொருபுறம் போஸ்டரிலும் அதிமுகவின் இந்த அதிருப்திகள் வெடித்து கிளம்பி உள்ளன.. "ஐபிஎஸ் படித்தவனை ஆடு மேய்க்க விட்ட இயக்கமல்ல. ஆடு மேய்த்தவனை ஐபிஎஸ் ஆக்கிய அண்ணா பெயரில் இயங்கும் மாபெரும் மக்கள் இயக்கம். கூட்டணியாவது, கூந்தலாவது... நன்றி மீண்டும் வராதீர்கள், கூட்டணியில் பாஜக இல்லை. விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் சுழி போட்டாச்சு.. நாளை நமதே... 40ம் நமதே" என்ற வாசகங்கள் போஸ்டர்களில் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டு வருகிறது.
அதிமுகவின் இந்த அடுத்தடுத்த முடிவுகளால் பாஜக அதிர்ச்சியானதோ இல்லையோ, ஓபிஎஸ் தரப்பு படுகுஷியில் உள்ளதாம்.. இனி கூட்டணியில் அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications