ராஜேஸ்வரி பிரியா.. எடப்பாடி கிட்ட போயி.. "திமுகவுக்கு தெரியாம ஓட்டு போட்டுட்டோம்"ன்னு.. இப்ப பாருங்க
சென்னை: அதிமுகவில் மெகா கூட்டணி இன்னும் ஏற்படாத சூழலில், பல்வேறு தரப்பினர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தந்து வருகிறார்கள். அந்தவகையில்தான், ராஜேஸ்வரி பிரியாவும் அதிமுகவுக்கான ஆதரவை தந்திருக்கிறார். இதை திமுக உற்று கவனிக்க துவங்கி உள்ளது.
ஆரம்ப காலங்களில், பாமகவில் இணைந்து செயல்பட்டவர் ராஜேஸ்வரி பிரியா.. அக்கட்சியின் மாநில நிர்வாகியாகவும் இருந்தவர்.. அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததை கண்டித்து, பாமகவில் இருந்து அதிரடியாக விலகினார்.

பிறகு "அனைத்து மக்கள் அரசியல் கட்சி" என்ற பெயரில் புதுக்கட்சியை ஆரம்பித்து, பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.. இயல்பாகவே சமூக அக்கறை நிறைந்த ராஜேஸ்வரி பிரியா.. இளைய சமுதாயத்துக்கு தேவையான கருத்துக்களை தன்னுடைய ஒவ்வொரு பேட்டிகளின் மூலமும் விடாமல் எடுத்து சொல்லி வருபவரும்கூட.
சீர்கேடுகள்: பிக்பாஸ் நிகழ்ச்சி போன்றவை கலாச்சார சீர்கேடுகளுக்கு வழிவகுப்பவை என்று கண்டித்ததுடன், அந்த நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டங்களையும் முன்னெடுத்து தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தவர்.
அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சிப்பவர்.. திமுக அரசின் ஒவ்வொரு செயல்பாட்டையும் இடித்துரைத்து வருகிறார். கள்ளச்சாரா விவகாரம் முதல் செந்தில் பாலாஜி கைது வரை புட்டுபுட்டு வைத்து, அரசுக்கு எதிராக தன்னுடைய கேள்விகளை முன்வைத்தவர். இதோ ராஜேஸ்வரி பிரியா பேசியதன் ஒரு "சாம்பிள்" இங்கு பார்க்கலாம்:
"திமுகவில் செந்தில் பாலாஜி சேருவதற்கு முன்பிருந்தே, அவர்மீது வழக்கு நடந்துக்கொண்டுதான் இருந்தது.. இதெல்லாம் தெரிந்தும்கூட, அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை திமுக அரசு ஒதுக்கலாமா? அன்னைக்கு கோபேக் மோடி என்று சொன்னீர்கள், கருப்பு கொடியை பிடித்தீர்கள்.. இப்போ அதெல்லாம் மாறிவிட்டதை நாங்கள் கண்கூடாக பார்த்துட்டுதானே இருக்கோம்?

திமுக அரசு: மக்கள் தெரியாத்தனமாக திமுகவுக்கு ஓட்டு போட்டுட்டாங்க.. சட்டம் ஒழுங்கு முதல் கள்ளச்சாராயம் வரை மக்கள் உங்ககிட்ட சிக்கிக்கிட்டு இருக்காங்க.. இதுக்கு முன்பு, கள்ளச்சாராயம் பிரச்சனை தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை.. சட்டம் ஒழுங்கு இங்கே சீர்குலையவே இல்லை என்று நான் சொல்லவிலை.. ஆனால், இவையெல்லாம் திமுக ஆட்சியில் அதிகமாகிவிட்டது..
சுருக்கமாக சொல்லப்போனால், திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஊழலை ஊற்றுக்கண்ணாகத் திறந்துவிடுகின்றனர்.. அதற்கு அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை பலிகடா ஆக்கிவிடுகிறார்கள்" என்று ராஜேஸ்வரி பிரியா பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் இணையத்தை உலுக்கியெடுத்தன.
விஜய்: இதுவரை தமிழ்நாட்டை அசைத்த எந்த பிரச்சனைகளுக்கும் வாய் திறக்காத விஜய், திடீரென அரசியலுக்குள் என்ட்ரி தந்ததை ஏடாகூடமாக விமர்சித்து, ஏராளமான எதிர்ப்புகளை விஜய் ரசிகர்களிடம் சம்பாதித்து கொண்டவர் ராஜேஸ்வரி பிரியா.
இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுகவுக்கான தன்னுடைய ஆதரவை வழங்கி உள்ளார்.. தன்னுடைய கட்சியின் நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார் ராஜேஸ்வரி பிரியா.
தங்கள் கட்சி அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக ஆதரவு கடிதத்தையும் எடப்பாடியிடம் தந்தார்.. ராஜேஸ்வரி பிரியாவை அன்போடு வரவேற்று எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துக் கொண்டார்...
எடப்பாடி பழனிசாமி: மிகப்பெரிய கட்சிகள் இதுவரை அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை.. ஆதரவையும் வழங்கவில்லை. ஆனால், சிறு சிறு கட்சிகளும், அமைப்புகளும் எடப்பாடிக்கான ஆதரவை தினமும் வழங்கி கொண்டிருக்கின்றன.. அந்தவகையில், ராஜேஸ்வரியின் பிரியாவின் இந்த ஆதரவு, திமுகவை எதிர்ப்பதற்கான பலத்தை அதிமுகவுக்கு பெற்றுத்தரும் என்றே நம்பப்படுகிறது.
ஆனால், இன்னொரு விஷயத்தையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. கடந்த 2019 தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தவர் ராஜேஸ்வரி பிரியா..
காலம் மாறும்: ஆனாலும், பாமக பிடிவாதமாக அதிமுகவுடன் இணைந்து தேர்தலை அப்போது சந்தித்தது. அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துவிட்டதாலேயே, அதனை கண்டித்து, ராஜேஸ்வரி பிரியா கட்சியை விட்டு வெளியேறினார். அப்படிப்பட்ட ராஜேஸ்வரி பிரியா, இன்று அதே அதிமுகவுக்கு ஆதரவை தந்துள்ளதை என்னவென்று சொல்வது???? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
இப்படித் தினந்தோறும் ஒரு அரசியல் கட்சி அல்லது அமைப்புகளின் தலைவர்கள் வந்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications