15 + 20 + 5 சீட்.. புஸ்ஸூனு போச்சே.. அப்போ பாஜகவின் "ராஜகுரு" இவரா? அதிமுக தலைக்கு மேல "அது" தொங்குதே
சென்னை: ரஜினிகாந்த், முதல்வர் யோகி காலில் விழுந்த நொடியிலிருந்தே, பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் அரசியல் களம் அனலடித்து கொண்டிருக்கிறது. ரஜினி ஏன் உத்தரபிரதேசம் சென்றார் என்பதற்கான காரணங்களும் பெருகி கொண்டே வருகின்றது.
வரும் எம்பி தேர்தலில் ரஜினிகாந்த்தை, கட்சியின் "ராஜகுரு"வாக பயன்படுத்த, மேலிட பாஜக தரப்பிலிருந்து அசைன்மென்ட்' ஒன்று தரப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், உபி முதல்வர் யோகியை ரஜினி சந்தித்ததன் பின்னணியில் அரசியல் காரணங்களும் வலம்வந்து கொண்டிருக்கின்றன.

தேசிய தலைவர்கள்: அதன்படியே, தேசிய அளவில் மாநில கட்சிகளின் தலைவர்களையும், ரஜினி சந்தித்து வருவதாகவும், அகிலேஷ் யாதவை சந்தித்து பேசியதும் இந்த பின்னணியில்தான் என்கிறார்கள்.. இதற்கு பிறகு, சந்திரபாபு நாயுடு, சரத்பவார் போன்ற ஜாம்பவான்களையும், இனிமேல் சந்தித்து ரஜினி பேச உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, தற்சமயம், திரிணாமுல் காங்கிரசில் ஐக்கியமாகியுள்ள மூத்த தலைவரும், தன்னுடைய நெருங்கிய நண்பருமான சத்ருகன் சின்ஹாவை மறுபடியும் பாஜகவுக்கு வருமாறு ரஜினி அழைப்பு விடுத்துள்ளாராம்..
கூட்டணி: தேசிய லெவலில் இப்படியான மூவ் நடக்கிறதென்றால், நம்முடைய தமிழகத்திலும் இதற்கான அதிரடி கிளம்பி உள்ளதாக தெரிகிறது. அதாவது, அதிமுக கூட்டணியில், பாஜகவுக்கு 15 சீட் + ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு 20 சீட் என ரஜினிகாந்த்தை வைத்து பேச்சு நடத்தவிருப்பதாக சொல்கிறார்கள்.
கடந்த 2021 தேர்தலிலேயே இப்படி ஒரு ஐடியா பாஜகவுக்கு இருந்த நிலையில், அப்போது ரஜினி இதற்கு மறுப்பு கூறியிருந்தார்.. வெறும் 20 தொகுதிகளுக்காக நான் களமிறங்க முடியாது.. 2024 தேர்தலில், என் நண்பர் மோடியை மீண்டும் பிரதமராக்க கண்டிப்பாக வாய்ஸ் தருவேன் என்று பாஜகவிடம் வாக்குறுதி தந்திருந்தாராம். அதனால்தான், இப்போது ரஜினியை மையமாக வைத்து அரசியல் வலை பின்னப்படுகிறது என்கிறார்கள்.
குட்டி பிளாஷ்பேக்: இந்நிலையில், நாம் ஒரு குட்டி பிளாஷ்பேக்கிற்கு போக வேண்டி உள்ளது. கடந்த வருடம், அதிமுகவில் உச்சக்கட்ட மோதல் நடந்து கொண்டிருந்தது. இரட்டை இலை விவகாரம் வெடித்திருந்தது. இப்படி ஒரு பரபரப்பான நேரத்தில்தான், ஆளுநர் ரவியை, ரஜினிகாந்த சந்தித்து பேசியிருந்தார். திடுதிப்பென்று கிண்டிக்கு ரஜினி செல்லவும், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு எகிறியது.
எதற்காக ஆளுநரை சந்தித்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நட்பு ரீதியான சந்திப்புதானே தவிர, அரசியல் எதுவும் பேசவில்லை என்று அதே வழக்கமான பதிலையை ரஜினி அப்போதும் கூறியிருந்தார்.
ஆனால், இந்த சந்திப்புக்கு பின்னால், ஒரு அரசியல் காரணம் சலசலக்கப்பட்டது.. அதாவது, அதிமுக சின்னத்தை முடக்கி, ரஜினியை அதிமுகவுக்குள் கொண்டு வந்து, ரஜினியை முன்னிறுத்தி, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிடுவதாக சொல்லப்பட்டது.. ஆளுநர் - ரஜினி சந்திப்பை வைத்து, இந்த தகவல் அரசியல் களத்தில் கட்டமைக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
வளர்ச்சி: எடப்பாடியின் விஸ்வரூப வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், கூட்டணி விஷயத்தில் அனைத்து முடிவுகளும், தங்களின் தலைமையின்கீழே இருக்க வேண்டும் என்றே பாஜக விரும்புகிறதாம். அதனாலேயே, கூட்டணிக்கு தலைமையாக ரஜினியை முன்னிறுத்த ஆசைப்படுவதாகவும் செய்திகள் கசிந்தன. இதற்கு பிறகு, கர்நாடக தேர்தல், ஈரோடு இடைத்தேர்தல், ராகுல் யாத்திரை என அரசியல் களமே பரபரத்துவிட்டதால், ரஜினி விவகாரம் பெரிதாக பேசப்படவில்லை.
இப்போது, முதல்வர் யோகியை சந்தித்தபிறகுதான், மீண்டும் சலசலப்புகள் கூடி உள்ளன.. ராஜகுரு ஸ்தானத்தில் ரஜினி அமர்த்தப்படலாம் என்றும், கூட்டணி தலைமைக்கு ரஜினியை கொண்டுவரப்படலாம் என்றும் இருவேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தை சுற்றிக்கொண்டிருக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி: ஸ்திரத்தன்மை வாய்ந்த பாஜக எடுக்க போகும் முடிவுகளுக்கு சசிகலாவும், தினகரனும், ஓபிஎஸ்ஸும் கட்டுப்பட வாய்ப்புள்ளது என்றாலும், மதுரையில் கெத்து காட்டிவிட்டு திரும்பியுள்ள, எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார்? என்று தெரியவில்லை.
காரணம், நேற்றைய தினம், அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் ரஜினி குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஜெயக்குமார், "யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.. அதில் எங்களுக்கு ஒன்றும் மாறுபட்ட கருத்து கிடையாது.. ஆனால், அப்படி அரசியலுக்கு வருபவர்களை அங்கீகரிப்பது மக்கள்தான்..
ஜெயக்குமார்: ரஜினி மனசுல என்ன இருக்குதுன்னு எனக்கும் தெரியாது.. உங்களுக்கும் தெரியாது.. அது அவருக்கு மட்டுமே தெரியும்.. அதனால், அவங்களை எல்லாம் சந்தித்து பேசியிருக்கிறார் என்றால், எப்படியிருந்தாலும், பூனை ஒருநாள் வெளியே வந்துதானே ஆகும்? அந்த பூனை வெளியே வரும்போது, நான் இதுக்கு பதில் சொல்றேன்" என்றார். ஆக, ரஜினியின் உபி செயலை ஜெயக்குமார் வரவேற்று பேசவில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரோல், இந்த முறை தேர்தலில் எந்தமாதிரியான வடிவத்தில் இருக்க போகிறது என்றும் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications