புகழேந்தியின் அவதூறு வழக்கு ரத்து: எடப்பாடி- ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்
சென்னை: அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன் வைக்கப்பட்ட முறையீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.
அதிமுகவில் கட்சி விதிகளுக்கு எதிராக செய்யப்பட்டதாக கூறி புகழேந்தி நீக்கப்பட்டார். அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டனர்.இந்த நிலையில் தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அதிமுக தலைமை செயல்பட்டதாக புகழேந்தி வழக்கு தொடுத்தார்.
நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதனால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று புகழேந்தி மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்து இருந்தார்.

வழக்கு
இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் 24ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று இவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த அவதூறு வழக்கிற்கு எதிராக , அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மனு
தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும், அவதூறு வழக்கிற்கு எதிரான மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி இவர்கள் மனு தாக்கல் செய்து இருந்தனர். நாளை இருவரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலையில் தங்கள் மனுக்கள் மீதான விசாரணையை இன்றே அவரசமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் கோரப்பட்டு இருந்தது.

காரணம்
இவர்கள் தங்கள் மனுவில், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் புகழேந்தி நீக்கப்பட்டு இருக்கிறார். கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் கட்சி விதிகளின்படியே செய்யப்பட்டு இருக்கிறது. கட்சியில் ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் இதற்கான அதிகாரம் உள்ளது.

முடியாது
உறுப்பினர் ஒருவரை கட்சியில் இருந்து நீக்கிய விவரத்தை பொதுவில் வெளியிடுவது வழக்கம்தான். கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் இப்படி அறிக்கை வெளியிடப்படும். இது அவதூறு குற்றமாகாது. இதனால் நாங்கள் தொடுத்து இருக்கும் வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். அதோடு எங்களுக்கு எதிரான சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கை நிராகரிப்பு
உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் முன் இதற்கான முறையீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது, எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் வழக்குகள் வெள்ளிக்கிழமை தான் பட்டியலிடப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார். சிறப்பு நீதிமன்றத்தில் ஏதேனும் எதிர்மறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அப்போது உயர் நீதிமன்றத்தை அணுகலாமே தவிர தற்போது அவசர வழக்காக இதை விசாரிக்க முடியாது என்று சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications