ஞாபகமிருக்கா 2014? காங்கிரஸின் கண்ணை உறுத்தும் 16 சீட்கள்? கலங்கிய நீரில் மீன் பிடிக்குதா அதிமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டணி விவகாரங்கள் எப்போது ஒரு முடிவுக்கு வரும் என்று காத்து கிடக்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல்கள் வெடித்து கிளம்பி கொண்டிருக்கின்றன.. உறுதிப்படுத்தப்படாத பல தகவல்களால், சோஷியல் மீடியாவே பரபரப்பாக காணப்படுகிறது.

கடந்த முறை முதல்நபராக திமுகவுடன் கூட்டணி வைத்தது காங்கிரஸ்.. ஆனால், இப்போது கடைசி நபராக இழுபறியில் உள்ளது.. இதற்கு காரணம், காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக தெரிகிறது.

Can Tamil Nadu Congress alliance with AIADMK Edappadi Palanisamy and what happened between DMK Congress

புதுச்சேரி: புதுச்சேரியுடன் சேர்த்து மொத்தம் 6 சீட் தருவதாக திமுக உறுதியாக சொல்லிவிட்டதாம். ஆனால், அந்த எண்ணிக்கையை கொஞ்சம் உயர்த்தி வழங்கும்படி தமிழக காங்கிரஸ் கேட்டுக் கொண்டு வருகிறது.

எங்களுடன் கூட்டணி அமைக்க அதிமுக விரும்புகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சொன்ன ஒரு வார்த்தை, திமுகவையே அதிர வைத்துவிட்டது.. இது கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாகிவிட்டது. இறுதியில், திமுகவுடன்தான் கூட்டணி, பிற கட்சிகளுடன் கிடையாது என்று டெல்லியிலிருந்து அறிவுறுத்தப்பட்டபிறகுதான், தமிழக காங்கிரஸ் மேலிடம் அமைதியானது.

விலகும் அதிருப்தி: இதையடுத்து, திமுகவின் அதிருப்தியும் மெல்ல விலகி, கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. அநேகமாக 2 நாளில், இது தொடர்பான பாசிட்டிவ் தகவல் வரும் என்கிறார்கள்.

இதுஒருபக்கம் இருந்தாலும், மீண்டும் குட்டையை குழப்புவது போல சில தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.. அதாவது, கூட்டணி உடைந்து விடகூடாது என்ற மனநிலையில் இருக்கும் திமுக ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே, தொகுதி பங்கீடு சுமூகமாக முடியும், 9 தொகுதிகள் முடிவாகி விட்டது என்றெல்லாம் தகவல்களை கசிய விடுகிறார்களாம்.. ஆனால் திமுக மூத்த தலைவர்கள் யாரும் இதுவரை காங்கிரசுக்கு சாதகமான கருத்துக்கள் எதுவுமே சொல்லவில்லையாம்.

16 சீட்கள்: அதனால்தான் அதிமுக தரப்பில் காங்கிரஸை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், மறைமுகமாக காங்கிரசுக்கு அழைப்பும் விடுத்து வருகிறார்கள், அதிமுக பக்கம் போகலாம் என்றெல்லாம் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் சிலர் முன் வைத்து வருகிறார்களாம். அதுமட்டுமல்ல, அதிமுகவில் 16 சீட்வரை தர தயாராக இருக்கிறார்களாம்.. ஆனால் திமுகவிலோ, கேட்கப்படும் சீட் தராமல், கேட்கப்படும் தொகுதியும் தராமல், இழுபறியில் விடுகிறார்கள்.

இப்படித்தான், கடந்த 2014 தேர்தலிலேயே கடைசிவரை இழுபறியாகி, ஒருமுடிவும் எடுக்க முடியாமல், காங்கிரஸ் தனித்து போட்டியிடும் நிலைமைக்கு வந்தது.. அப்படி ஒரு நிலைமை இந்த முறை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், அதிமுக குறித்த தகவல்களை மேலிடத்துக்கு சில கதர் தலைவர்கள் தகவல்கள் அனுப்பி வருகிறார்களாம்.

மதிமுக, விசிக: எனினும், மேலிட தலைவர்கள் அவசரம் காட்டவில்லை.. விசிக, மதிமுகவுடனும் கூட்டணி முடிவாகாதபோது, நாம மட்டும் ஏன் அவசரப்பட வேண்டும்? அவர்களுடன் கூட்டணி முடியட்டும், அதுவரை அமைதியாக இருங்கள்" என்று மேலிடத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

ஒருபக்கம் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.. இன்னொரு பக்கம், 16 சீட் தரப்போவதாக அதிமுகவில் ஆசை கட்டப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இதில் எது உண்மை என்று தெரியவில்லை.

யார் அது: ஆனால், திமுக - காங்கிரஸ் கூட்டணி எப்போது உறுதியாகும் என்பதில், திமுக, காங்கிரஸைவிட, எக்கச்சக்க ஆர்வத்துடன் இருப்பவர் அதிமுக ஜெயக்குமார்தான் போலும்.. "திமுக கூட்டணி உடைந்து, அதிலிருந்து சில கட்சிகள் அதிமுகவுக்கு வரப்போகிறார்கள்" என்று ஜெயக்குமார் ஆரூடம் சொல்லி கொண்டேயிருக்கிறார்.. ஆனால், அது எந்த கட்சி என்றுதான் இப்போதுவரை தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+