Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துண்டு போட்ட பாஜக.. எடப்பாடியை விட்டுட்டு வந்தாரே ஜி.கே. வாசன்? உள்ளதும் போச்சா? "மதில் மேல் " தமாகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் முக்கிய முடிவினை எடுத்துள்ளதாகவும், அதை பற்றி தன்னுடைய நிர்வாகிகளிடமும் ஆலோசனை மேற்கொண்டதாகவும், பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.

கடந்த, 2014ல், மூத்த தலைவர் ஞானதேசிகன், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, கட்சி உறுப்பினர் அட்டையில், மறைந்த தலைவர் மூப்பனார் போட்டோ இடம்பெறுவதற்கு டெல்லி மேலிடம் அனுமதிக்கவில்லை... இதனால், கடுப்பான ஜிகே வாசன், தன்னுடைய ஆதரவாளர்களுடன், காங்கிரசில் இருந்து வெளியேறி, மறுபடியும் தமாகாவை உருவாக்கினார் ..

GK Vasan BJP TMC

தமாகா போட்டி: இதையடுத்து, கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து தமாகா போட்டியிட்டது. ஆனால், தேர்தலில் மண்ணை கவ்வியது.

இதனால் அதிருப்திக்குள்ளான முக்கிய தலைவர்கள் பலர் தமாகாவிலிருந்து விலகி, காங்கிரஸ், அதிமுகவுக்கு சென்றுவிட்டனர்.. பிறகு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், ஓபிஎஸ் அணிக்கு தமாகா ஆதரவு தந்தது. பிறகு, விவசாயிகள் பிரச்சனைக்காக, திமுகவின் அனைத்து கட்சிகளின் கூட்டத்திலும் வாசன் பங்கேற்றார். இப்படி அதிமுக, திமுக என 2 பக்கமும் நெருக்கம் காட்டிய நிலையில், அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க துவங்கினார்.

பாஜக கூட்டணி: மற்றொருபக்கம், பாஜகவுக்கு நெருக்கமானவராக வாசன் கருதப்பட்டு வரும்நிலையில், "உங்களை மத்திய அமைச்சராக்குகிறோம். பாஜகவில் இணைந்துவிடுங்கள்.. கட்சிக்குள் வந்துவிட்டால் மக்களவைத் தேர்தல் முடிந்ததும் உங்களை மத்திய அமைச்சராக்குவது எங்கள் பொறுப்பு" என்று பாஜக மேலிடம் கடந்த சில வருடங்களாகவே வாசனை வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.

இதையடுத்து, கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி மட்டுமே வைத்தார் வாசன்... 3 தொகுதிகள் வேண்டும் என்றும் வாசன் அடம்பிடித்தார். முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான ஓபிஎஸ்ஸுக்கே 1 சீட் மட்டுமே பாஜக ஒதுக்கியது. அதேபோல, வாக்கு வங்கியை வலுவாக வைத்திருக்கும் அமமுகவுக்கும் 1 சீட் மட்டுமே பாஜக தந்திருந்தது. ஆனால், வாசனுக்கோ 3 சீட்களை ஒதுக்கியது. எனினும் ஒன்றில்கூட தமாகா வெற்றி பெறவில்லை.

கலைத்து விடலாமா: இப்போது ஜி.கே.வாசனின் த.மா.கா. கட்சி கரைந்து கொண்டிருக்கிறதாம். பேசாமல் கட்சியை கலைத்து விடலாமா ? என்கிற யோசனையும் அவரிடம் பல நேரங்களில் எதிரொலிக்கவே செய்கிறது என்கிறார்கள் த.மா.கா.வினர். சமீபத்தில் நடந்த கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டு தேர்வுசெய்யப்பட்டனர்.

இந்த ஆலோசனையின் போது,"காங்கிரசில் மீண்டும் இணைந்து விடலாம். சோனியாவிடம் நீங்கள் பேசுங்கள்" என முக்கியஸ்தர்கள் சிலர் வாசனிடம் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு வாசன், "வாய்ப்பில்லை. அந்த யோசனையை விட்டுவிடுங்கள். நமக்காகப் பேச முன்பு பிரணாப் முகர்ஜி இருந்தார். அவர் மறைந்துவிட்டார். நமக்காக பேச காங்கிரசில் யாரும் இல்லை. ராகுல்காந்தி நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார். நமக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர்களும் வேகமாக செயலாற்றுவார்கள். அதனால் அந்த பேச்சு வேண்டாம்" என்று சொல்லியுள்ளார்.

மத்திய அமைச்சர்: மேலும் பாஜகவில் இணையச் சொல்லி டெல்லியில் இருந்து வலியுறுத்துகின்றனர் என்று வாசன் சொன்னபோது, "உங்களுக்கு தலைவர் பதவியும், மத்திய அமைச்சர் பதவியும் தருவதற்கு டெல்லி முன்வந்தால் பாஜக ஆஃபரை பரிசீலிக்கலாம் " என்று பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.

அப்போது பேசிய மூத்த தலைவர்களில் ஒருவர், "கட்சியில் முதலில் இணைந்து விட வேன்டுமாம். பிறகு பதவிகள் குறித்துப் பேசிக்கொள்ளலாம் என சொல்கிறார்கள். இதனை தலைவர் வாசன் ஏற்கவில்லை" என்று விவரிக்க, " உத்தரவாதம் இல்லாமல் எதற்கு சம்மதம் கொடுத்துவிடக் கூடாது " என்று கோரஸாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

வாசன் கட்சி: அதன்பிறகு அந்த விவாதம் அப்படியே முற்றுப்பெற்று, தனித்தன்மையுடன் த.மா.கா. இயங்கும் என முடிவு செய்துவிட்டு கூட்டத்தை கலைத்து விட்டார் ஜி.கே.வாசன்.

இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்திருக்கும் நிலையில், வாசனின் முடிவு குறித்து அவரிடம் பேச பாஜக தேசிய தலைமைத் திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்களிலேயே பரவிகிடக்கிறது.

உத்தரவாதம்: "காங்கிரஸ் பாரம்பர்யத்தை சேர்ந்த ஜி.கே.வாசன், மதவாதக் கட்சியான பாஜகவில் சேருவதா?" என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான கே.எஸ். அழகிரி ஏற்கனவே ஒருமுறை விமர்சித்திருந்தார். என்னதான், ராகுல் காந்தி மீது வாசனுக்கு பிரியமும், மதிப்பும் இருந்தாலும், காங்கிரஸுடன் இணையும் எண்ணம் துளிகூட இல்லை என்கிறார்கள்.

ஆனால், பாஜகவை பற்றி முழுமையாக எந்த முடிவும் இன்னும் தமாகா எடுக்கவில்லையாம். ஒருவேளை பதவிக்கான உத்தரவாதத்தை பாஜக தந்தால், தமாகா பரிசீலிக்கு என்றே தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+