துள்ளுது சென்னை சேப்பாக்கம்.. இன்று 20/20 ஐபிஎல் போட்டி..அரசு பஸ்ஸில் கட்டணமில்லா பயணமா? இதோ பாருங்க
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் நடக்க உள்ள நிலையில், போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.
கடந்த மார்ச் 22ம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கி நடந்து வருகிறது.. இதில் பல ஆட்டங்கள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும் விளையாட்டுக்கள் பெரும்பாலும், சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது..

எனவே சிஎஸ்கே ரசிகர்களுக்காகவே, கிரிக்கெட் போட்டி டிக்கெட்டை காண்பித்து அரசு பேருந்தில் இலவசமாக பயணித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஏற்கனவே அறிவித்தது. ஆனோல், ஏ.சி பேருந்துகளில் இந்த சலுகை இல்லை என்றும் கூறப்பட்டது.
இந்த அறிவிப்பானது, சர்ச்சையை கிளப்பியிது.. கிரிக்கெட் ரசிகர்களுக்காக, அரசு பஸ்ஸை எப்படி இலவசமாக அனுமதிக்கலாம்? என்று கேள்வி எழுந்தது.. பிறகு, இதற்கு போக்குவரத்து கழகம் விளக்கம் ஒன்றினை தந்திருந்தது.
இலவச பயணம்: அதாவது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசு செலவில் இந்த இலவச பயணத்தை வழங்கவில்லை என்றும், போக்குவரத்து கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள சிஎஸ்கே அணி நிர்வாகம்தான், மொத்த பயணச்செலவையும் போக்குவரத்துத் துறைக்கு செலுத்தியிருக்கிறது என்று தெரிவித்தது. இந்த விளக்கத்தையடுத்து, நிலவிவந்த சர்ச்சைகள் முடிவுக்கு வந்தன.
இப்போது மறுபடியும் இன்னொரு சந்தேகம் கிளம்பியிருக்கிறது.. இன்றைய தினம் ஐபிஎல் கிரிக்கெட்டின் அரையிறுதி போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்க போகிறது.. அதேபோல, நாளை மறுநாள் 26ம் தேதி, இறுதிப் போட்டியும் நடக்க போகிறது.. இந்த போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு, அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாமா? என்று சந்தேகம் எழுந்தது.
அறிவிப்பு: இதற்கு மறுபடியும், மாநகர போக்குவரத்து கழகம் விளக்கம் தந்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.. அந்த அறிவிப்பில் உள்ளதாவது: "நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது குவாலிபையர் மற்றும் இறுதிப் போட்டி வரும் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னை - சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முந்தைய கிரிக்கெட் போட்டிகளில் சம்பந்தப்பட்ட போட்டிக்கான நுழைவுச்சீட்டு (டிக்கெட்) வைத்திருந்தால் அதை காண்பித்து மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சலுகை கிடையாது: ஆனால், வரும் 24, 26 தேதிகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு மாநகர பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதியில்லை. எனவே, போட்டிக்குச் செல்வோரும் பயணச்சீட்டு பெற்று பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஐபிஎல் போட்டிகளில், Online/pre-printed என்ற டிக்கெட்டை காண்பித்து, மாநகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications