வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு.. எல்லாம் மாறுது..பத்திரம் ஆபீசுக்கு போக வேணாம்.. தமிழக அரசு மாஸ்
சென்னை: பொதுமக்களின் வசதிக்காகவும், நலனுக்காகவும் பதிவுத்துறை பல்வேறு அதிரடிகளை மேற்கொண்ட வரும்நிலையில், தமிழக அமைச்சர் மூர்த்தி, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, பத்திரப்பதிவு துறையில், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வகையில், "ஸ்டார் 3.0" சாப்ட்வேர் தயாரிக்கும் பணிக்கு, அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.. இதுதொடர்பாக, பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.
பத்திரங்கள்: அதில், "சார் பதிவாளர் அலுவலகங்களில், 1975 முதல் பதிவான பத்திரங்களை ஸ்கேன் செய்து, "ஸ்டார் 3.0" தொகுப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாவட்ட பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பத்திரங்களை தங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கேன் தொகுப்புடன் ஒப்பிட்டு சார் பதிவாளர்கள் சரி பார்க்க வேண்டும்.

ஏதாவது பத்திரங்கள் விடுபட்டு இருந்தால், அது குறித்து மேலதிகாரிகளுக்கு தெரிவித்து, மறுபடியும் ஸ்கேன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறிவுறுத்தல்: நீதிமன்றங்கள், விசாரணை அமைப்புகளுக்கு அனுப்பியவை, சிதிலமடைந்த ஆவண தொகுதிகள், முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்ட ஆவண தொகுதிகள் தொடர்பாக, ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளை, சார் பதிவாளர்கள் கடைபிடிக்கலாம்' என்று அறிவுறுத்தியிருந்தார்.
இதனிடையே, வழக்கு ஒன்றில் மதுரை ஹைகோர்ட் நேற்றுமுன்தினம் உத்தரவை ஒன்றினை பிறப்பித்திருந்தது. சம்பந்தப்பட்ட வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து முடித்து, ''2.0விற்கு பதிலாக '3.0' மென்பொருளாக மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை 8 வாரங்களில் முடிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டிருந்தார்.
ஆக, தற்போதுள்ள ஸ்டார் - 2.0 சாப்ட்வேரை மேம்படுத்தும் வகையில், ஸ்டார் - 3.0 சாப்ட்வேர் தயாரிக்க தமிழக அரசு, ஏற்கனவே திட்டமிடப்படு வரும்நிலையில், இதற்கான பணிகள் குறித்து ஆலோசனை பெறுவதற்கான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கை துவக்கி வைத்து, அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:
பத்திரப்பதிவு: பத்திரப்பதிவில் கணினிமயமாக்கலுக்காக ஸ்டார் திட்டம், கடந்த 2000ம் ஆண்டில் துவக்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு மேற்கொள்ள, ஸ்டார் 2.0 சாப்ட்வேர் பயன்பாட்டுக்கு வந்தது....
பயன்பாட்டு நிலையில் தெரியவந்த விஷயங்கள், மக்களின் தேவைகள், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் வைத்து ஸ்டார் 3.0 சாப்ட்வேர் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.. இதற்காக வல்லுனர் குழுக்கள் அமைத்து பணிகளும் துவக்கப்பட்டுள்ளன. எனினும், தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆலோசனைகளை பெறுவதற்காக, இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
புதிய சாப்ட்வேர்: ஸ்டார் 3.0 சாப்ட்வேரை பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில், புதிய வழிமுறைகளை அமல்படுத்த வேண்டும். பத்திரப்பதிவு உள்ளிட்ட சேவைகளை, பொது மக்கள் அலுவலகம் செல்லாமலேயே பெறுவதற்கு வழி செய்ய வேண்டும். பதிவுத்துறை சேவைகளை மக்கள் பெற செல்போன் போன் செயலி உருவாக்க வேண்டும்.. தரவுகளை எங்கிருந்தும் எளிதாக பயன்படுத்தும் வகையில் "கிளவுட் கம்ப்யூட்டிங்" தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும்" என்றார்.
இந்த ஸ்டார் 3.0 திட்டம் குறித்து, அமைச்சர் மூர்த்தி கடந்த ஜூலை மாதமே கூறியிருந்தார்.. அதாவது, செயற்கை நுண்ணறிவு, பெருந்தரவு பகுப்பாய்வு, தானியங்கி முறையில் சான்றிதழ் சேவை முதலான உத்திகள் செயல்படுத்தப்படவுள்ளது.. எனவே, 323 புள்ளி 45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டிருந்தது..
கண்காணிப்பு குழு: இந்த திட்டத்தை கண்காணிக்க தலைமை செயலரின் தலைமையில் மாநில அளவிளான குழுவும்,பதிவுத்துறை தலைவர் தலைமையிலான திட்ட செயலாக்க குழுவும் உருவாக்கப்பட்டதுடன், இந்த திட்டத்திற்கென, திட்ட ஆலோசகர்கள் இருவரை நியமிக்கவும் அரசு அனுமதி தந்திருந்தது. இந்நிலையில், இதன் அடுத்தக்கட்ட விரிவாக்கம் குறித்த நடவடிக்கைகளும் துரிதமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications