AC கூலிங் கம்மியா இருக்கா? மழை நேரத்தில் AC ஓடுதா? குளிர்காலத்தில் ஏசியை பயன்படுத்தினால் என்னாகும்
சென்னை: குளிர்காலத்தில் ஏ.சி. இயந்திரங்களை பயன்படுத்துவதால் நமது ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? மழைக்காலங்களில் ஏசி மிஷினில் ஏதேனும் கோளாறுகள் ஏற்படுமா? மழை நேரத்தில் ஏசியை பயன்படுத்தினால் என்னாகும் தெரியுமா? அதை சுருக்கமாக பார்ப்போம்.
பொதுவாக, மழை மட்டுமல்ல, சூறாவளி, புயல் என எதுவாக இருந்தாலும், உடனடியாக ஏசியின் மெயின் ஸ்விட்சை நிறுத்திவிட வேண்டும். காரணம், இடி, மின்னல்கள் வீட்டை தாக்க நேர்ந்தால், அது மின்சார கம்பிகள் வழியாக சென்று, ஏசி யூனிட்டையே மொத்தமாக சிதைத்துவிட வாய்ப்புண்டு.

உஷ்ண காற்று: லேசாக மழை பெய்யும்போது, ஏசியை நாம் உபயோகப்படுத்தினோம் என்றாலும், மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்தும்போது, வழக்கத்தை விட வேகமாக உஷ்ணமாகிவிடும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால், லேசாக மழை பெய்யும்போது, ஏசி பயன்படுத்தும்போது, வெளியேயிருக்கும் ஏசி யூனிட்டிலிருந்து அழுக்குகள் சுத்தமாகும். அதேசமயம், அதிகமான காற்று, சூறாவளி, புயல் போன்ற நேரங்களில், ஏசி யூனிட்டுகளை சேதமடையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மழைக்காலத்தைபோல குளிர்காலத்திலும் ஏசியில் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. குளிர்காலத்தில் ஈரப்பதம் காரணமாக AC மிஷினில் அதிகமான தூசுகள் படியும்... ஏசி இயங்கும்போது, அவை காற்றில் பரவி, சுவாசக்கோளாறுகள், ஒவ்வாமைகளை தந்துவிடும்... இந்த குளிர்ந்த காற்றால், சருமம் மேலும் வறட்சி அடையக்கூடும்.. நுண்கிருமிகள் பாதிப்பால் சளி, இருமல், சரும பிரச்சினைகள் ஏற்படக்கூடும்..
குளிர்கால ஏசி: அதேபோல, குளிர்காலத்தில் ஏசியை சற்று கூடுதலாகவே பாதுகாக்க வேண்டியிருக்கிறது.. ஏனென்றால், வெயிலின் வெப்பத்திலிருந்து பாதுகாத்து கொள்ள குளுமை தேவைப்படுவதைப்போல, குளிர்காலத்தில் குளிர்ச்சியில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் வெப்பம் தேவைப்படுகிறது. அதனால், குளிர்காலத்தில் ஏசியை பயன்படுத்தினாலும், அவை எளிதில் பழுதாகிக்கூடும்.
ஏசியிலுள்ள கம்ப்ரசர் இயங்க வேண்டுமானால், இதற்கென அடர்த்தி அதிகமுள்ள கெமிக்கல் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.. இந்த எண்ணெய், குளிர்காலத்தில் உறையக்கூடியது. அதனால், ஏசியை பயன்படுத்தும்போது, ஏசியின் காயில்களும் பாதிக்கப்படலாம்.. அதேபோல, குளிர் காலத்தில், குளிரூட்டும் காயில்களில் ஒடுக்கம் இருந்தால், அது உறைந்து போய் யூனிட்டையும் சேதமாக்கிவிடலாம்.
அட்வைஸ்: எனவே, எப்போதுமே வெப்பநிலை 65 டிகிரி பாரன்ஹீட்டை விடக் குறைவாக இருந்தால், ஏசி-யை நீண்ட நேரம் இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.. அதாவது, முதலில் குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 60 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் இருக்கும் வரை காத்திருக்க வேண்டும். ஏனென்றால், இது ஏசி கம்பிரஸரில் உள்ள எண்ணெய்யை சூடாக்க அனுமதிக்கும்.. அத்துடன் மின்தேக்கியில் உள்ள உறைந்த கட்டிகள் எதுவுமில்லை என்பதையும் உறுதி செய்ய உதவும்.
ஆனால், இப்போது வரும் சில ஏசி மாடல்களில் ஹீட்டர் வசதியும் இருக்கிறது. இது குளிர் காலத்தில் சூடான காற்றை பெற முடிகிறது.. எனவே, இனிமேல் ஏசி வாங்குபவர்கள், இது போன்ற இரட்டை காலநிலை மாடல்கள் கொண்ட ஏசியை வாங்குவது நல்லது.
கம்ப்ரஸர்கள்: அதேபோல, கூடுமானவரை, மழைக்காலத்தை போல, குளிர்காலத்திலும் ஏசியை பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்தது என்றும், கம்ப்ரசர்களில் ஈரம்படும்போது அதன் பாகங்கள் துருப்பிடிக்காதவாறு, பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடிவைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications