கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் வந்த ரூ.1 கோடிக்கான கேள்வி.. உங்களால் பதில் சொல்ல முடியுமா? சவால்!
சென்னை: இந்தியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட ரூ.1 கோடிக்கான கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா? முயற்சி பண்ணி பாருங்களேன்!
இந்தியில் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் உங்களில் யார் கோடீஸ்வரன் எனப்படும் கேபிஎஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். தமிழில் இந்த நிகழ்ச்சியை நடிகர் சூர்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் தொகுத்து வழங்கி உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அமிதாப்புடன் ஆயுஷ் கார்க் என்ற இளைஞர் விளையாடினார். இதற்கு முந்தைய எபிசோடில் இவர் 1.6 லட்சம் ரூபாய் வரை வென்று இருந்தார்.

வெற்றி மேல் வெற்றி
அடுத்தடுத்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த இவர் கடைசியில் 1 கோடி ரூபாய் முன்னேறினார். இவரிடம் 1 கோடி ரூபாய்க்கான கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அந்த கேள்விக்கு அவர் தவறாக பதில் சொன்னார். இதன் காரணமாக அவருக்கு 75 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இந்த தொடரில் 75 லட்சம் ரூபாய் பெற்று இவர் சாதனை படைத்தது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. வடஇந்தியாவில் இணையம் முழுக்க இவர் விவாதமாகவும் மாறியுள்ளார்.

விவாதம்
தனியார் நிறுவனத்தில் மேனேஜராக இருக்கும் இவர் தன்னுடைய 10வது கேள்வியில் லைப்லைன் பயன்படுத்தினார். அதன் மூலம் 3.2 லட்சம் வென்றார். அதன்பின் 12வது கேள்விக்கு தனது நண்பருக்கு வீடியோ கால் செய்தார். அதே கேள்விக்கு மீண்டும் 50:50 லைப்லைன் பயன்படுத்தினார். இதில் சரியாக பதில் சொல்லி 12.5 லட்சம் ரூபாயை வென்றார். இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி 75 லட்சத்திற்கு சென்றார்.

உதாரணம்
இவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் உதாரணம்
நிலவில் இருந்து ஒரே நேரத்தில் ஒரு சுத்தியலையும் இறகையும் மேலே தூக்கி போட்டால், என்ன நடக்கும்? - பதில் : இரண்டும் ஒரே நேரத்தில் நிலவின் தரைக்கு வரும். போன்ற பல கேள்விகள் இவரிடம் கேட்கப்பட்டது.
அதேபோல் 75 லட்சம் ரூபாய்க்காக இவர்தம் டேவிஸ் கோப்பை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதில், 1974ல் எந்த அணி டேவிஸ் கோப்பையை வென்றது.
பதில் - தென்னாப்பிரிக்கா

1 கோடி ரூபாய் கேள்வி
இதையடுத்து ஆயுஷிடம் 1 கோடி ரூபாய்க்கு கேள்வி கேட்கப்பட்டது... அதில் கேள்வி: 8000 மீட்டர் உயரத்திற்கு மேல் மலைகளில் மனிதர்கள் உச்சிக்கு சென்ற முதல் மலை எது? ஆப்ஷன்ஸ்: அன்னபூர்ணா, லோட்சே, காஞ்சன்ஜங்கா மற்றும் மகாலு
இதற்கு தவறான பதிலை ஆயுஷ் அளித்ததால் அவர் 75 லட்சத்தோடு வீட்டிற்கு சென்றார். 25 வயது ஆகும் இவர் அகமதாபாத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த 1 கோடி ரூபாய்க்கான கேள்விக்கு பதில் தெரியுமா? தெரியவில்லையா ? சரி விடுங்கள்.
இதற்கான பதில்: அன்னபூர்ணா மலை!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications