Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்ளே களமிறங்கும் உதயநிதி.. திமுகவின் "நம்பர் 6" பிளான்.. லோக்சபா தேர்தலில்.. முக்கிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதிமுக இன்னும் கூட்டணி எதையும் அமைக்க முடியாமல் திணறி வருகிறது. இன்னொரு பக்கம் திமுக கூட்டணியை இறுதி செய்துவிட்டது.

லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

Candidates of DMK Lok Sabha election Minister Udhayanidhi Stalin wants to field 6 youths

இந்த லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது.

2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்.

திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)

திமுக அதிரடி; கடந்த வாரம் காங்கிரஸ் உடன் திமுக உடன்படிக்கையை மேற்கொண்டது. அதற்கு முன் மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இப்போதுதான் கையெழுத்து ஆனது.

அதேபோல் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை மற்றும் திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் சிபிஎம் கட்சி போட்டி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போட்டியிடுகிறது.

மதிமுக கூட்டணி: இது போக திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது . லோக்சபா தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று வைகோ அறிவித்துள்ளார். ஆனால் ராஜ்யசபா சீட் பற்றி பின்னர் பேசி முடிவெடுக்கப்படும் என்று வைகோ அறிவித்துள்ளார்.

ஏற்கனவே திமுக 2 தொகுதிகளின் பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பாக மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுக அதிரடி: இதன் மூலம் திமுக முதல் ஆளாக தொகுதி பங்கீடு விவரங்களை வெளியிட தொடங்கி உள்ளது. லோக்சபா தேர்தலுக்கான பணிகளை கடந்த சில நாட்களாகவே திமுக தீவிரமாக செய்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 38 இடங்களில் வென்றது. புதுச்சேரியில் 1 இடத்தில் வென்றது. இதே வெற்றியை இந்த முறை தமிழ்நாட்டில் பதிவு செய்வதற்கான தீவிரமான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது,.

40க்கு 40 இடங்களில் வெல்ல வேண்டும் என்று டார்கெட் வைத்து திமுக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தல் பணிகள் திமுகவிற்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வேக்கள்: இந்த நிலையில்தான் கோவை, சென்னை, சேலம், திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் திமுக சார்பாக பூத் கமிட்டி நிர்வாகிகள் முக்கியமான சர்வே ஒன்றை மேற்கொள்ள செய்து உள்ளனர். இந்த சர்வேபடி நேரடியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று சர்வே எடுப்பார்கள்.

அவர்களின் பூர்வீகம், வீடு, நிதி விவரங்களை கேட்பார்கள். இதில் ஜாதி தொடர்பான விவரங்களையும் சேகரிக்க உள்ளனராம். ஜாதி எண்ணிக்கையில் எத்தனை பேர் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த கணக்கெடுப்பை திமுக எடுக்கிறதாம். தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடங்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவதை வரை பல விஷயங்களில் கவனம் செலுத்தும் விதமாக திமுக இந்த கணக்கெடுப்பை கையில் எடுக்கிறதாம்.

உதயநிதி ஸ்டாலின்: கடந்த சில மாதங்களாகவே கட்சியில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளில் எல்லாம் உதயநிதி ஸ்டாலினின் தலையீடு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் எடுக்க கூடிய முடிவுகளுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. கட்சியின் அடுத்த அதிகார புள்ளியாகவும் உதயநிதி பார்க்கப்படுகிறார்.

2024 லோக்சபா தேர்தலுக்கு திமுக தயாராகி வரும் நிலையில்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுகவில் போட்டியிட உள்ள எம்பிக்கள் வேட்பாளர்கள் லிஸ்டை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறாராம். முன்னதாக கட்சியில் மாவட்ட செயலாளர்கள் பலரை தேர்வு செய்வதில் உதயநிதி பங்கு இருந்தது.

ஆனாலும் சீனியர்கள் பலர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் உதயநிதியின் முழுமையான லிஸ்ட் அப்போது பயன்படுத்தப்படவில்லை. பல சீனியர்களுக்கு மீண்டும் மாவட்ட செயலாளர்கள் பதவி வழங்கப்பட்டது. இதனால் உதயநிதிக்கு நெருக்கமான சில இளைஞரணி நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர்கள் பதவி வழங்க முடியாமல் போனது.

லோக்சபா தேர்தலில் இளைஞரணி : இந்த நிலையில்தான் இந்த லோக்சபா தேர்தலில் இளைஞரணி நிர்வாகிகளை களமிறக்க உதயநிதி முடிவு செய்துள்ளாராம். 40 தொகுதிகளில் திமுக எப்படியும் 25 தொகுதிகளில் போட்டியிடும். அதில் 6-8 தொகுதிகளில் இளைஞரணி வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறராம்.

அதாவது 25 இடங்களில் 12- 13 இடங்களை ஏற்கனவே எம்பியாக இருக்கும் சீனியர்களுக்கு கொடுக்கலாம். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம். ஆனால் 6-8 இடங்களை எப்படியாவது புதியவர்கள்தான் பெற வேண்டும். அதாவது இளைஞர்கள்தான் பெற வேண்டும் என்ற திட்டத்தில் உதயநிதி இருக்கிறாராம். குறைந்தது 6 பேர் இளைஞரணி பிரிவில் இருந்து வர வேண்டும் என்று உதயநிதி தீவிரமாக முயற்சிகளை செய்து வருகிறாராம்; இதற்காக வாரிசுகள் இல்லாத, 6 புது முகங்களை தேர்வு செய்துவிட்டாராம்.

இந்த 6 புதுமுகங்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களை தேர்தலில் நிற்க வைக்க வேண்டும் என்பதில் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+