சேலத்தில் திக் திக்.. டிவி பெண் ஆங்கர் மீது பகீர் புகார்! பலரை அடைத்து வைத்து கொடுமை -ஐகோர்ட் அதிரடி
சென்னை: சேலத்தில் உள்ள தனியார் மீட்பு மையத்தில் சட்டவிரோத காவலில் யாராவது அடைக்கப்பட்டு உள்ளார்களா என்பதை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சேலம் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொலைக்காட்சி தொகுப்பாளினி நந்தினி என்பவரும், அவரது சகோதரியும் சேர்ந்து தந்தையை சொத்துக்கு ஆசைப்பட்டு தனியார் மீட்பு மையத்தில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகவும், பலர் சட்டவிரோதமாக அந்த மீட்பு மையத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தப்படுவதாகவும் அவரது மற்றொரு சகோதரி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு பரபரப்பை கிளப்பி உள்ளது.

சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த மலர்விழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது தந்தை நாராயணன் மற்றும் தாய் சந்திரா ஆகியோர் கொண்டப்பநாய்க்கன்பட்டியில் மற்ற இரு மகள்களுடன் வசித்து வருவதாகவும், தான் காதல் திருமணம் முடித்து தனியாக வசித்து வருவதாக குறிப்பிட்டு உள்ளார்.
தன் தந்தை பெயரில் உள்ள வீடுகள் உள்ளிட்ட சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் தனது சகோதரிகள் பிரேமாவும், சின்னத்திரை தொகுப்பாளினியாக உள்ள நந்தினியும் தந்தையை கடத்தி, தீபக் என்பவர் நடத்தி வரும் நியூ லைஃப் மீட்பு மையத்தில் வைத்து கொடுமைப்படுத்தியதாக குறிப்பிட்டு உள்ளார்.
இந்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மீட்கப்பட்ட நாராயணனை சேலம் மாவட்ட காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நாராயணன் விருப்பப்படி மகள் மலர்விழியுடன் செல்ல அனுமதித்து, ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

இதற்கு இடையே மனுதாரர் மலர்விழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.விஜயபாஸ்கர், குறிப்பிட்ட மறுவாழ்வு மையத்தில் நாராயணனை போல மேலும் பலரும் அடைத்து வைக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்படுவதாகவும், அது தொடர்பாக நீதிமன்றம் கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்ற நீதிபதிகள், சேலம் அரிசிபாளையம் சாலையில் அமைந்து உள்ள நியூ லைஃப் மீட்பு மையத்தில் சட்டவிரோத காவலில் எவரேனும் வைக்கப்பட்டு உள்ளார்களா என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சேலம் மாவட்ட காவல் துறைக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications