சமூக வலைதளங்களில் வதந்தி.. பொய் பரப்பிய அதிமுக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் மீது வழக்கு!
சென்னை: சமூக வலைதளத்தில் பொய்யான தகவலை பரப்பிய புகாரில் அதிமுக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் மழைநீரால் மின்கசிவு ஏற்பட்டதாக பொய்யான தகவலை பரப்பிய புகாரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கொட்டிய கனமழை பல மாவட்டங்களை புரட்டி எடுத்த நிலையில், சென்னை பெரிய ஆபத்தின்றி தப்பியது. சென்னையின் தாழ்வான பகுதிகளில் கனமழை காரணமாக மழைநீர் தேங்கி இருந்த நிலையில், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் காரணமாக விரைவாகவே வெள்ள நீர் வடிந்தது.

அந்த சமயத்தில் சென்னை மெரினா கடற்கரை அருகே மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டதாகக் கூறி காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. அதிமுக நிர்வாகியான சிடிஆர் நிர்மல் குமார், தனது எக்ஸ் பக்கத்தில், அந்த வீடியோவை பகிர்ந்து, "எங்கே பார்த்தாலும் மின் கசிவால் ஏற்படும் தீப்பொறி.. ஏன் இவ்வளவு அஜாக்கிரதை முதல்வரே?" எனக் கேள்வி எழுப்பி பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோ, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வியட்நாம் நாட்டின் கேன் தோ நகரில் மழை வெள்ளத்தின்போது எடுக்கப்பட்டது என தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு ஆய்வு செய்து தெரிவித்தது.
மியான்மரில் நடந்ததை சென்னையில் நடந்தது போல் அதிமுக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் பதிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் கண்டறிந்ததை அடுத்து, தான் வெளியிட்ட பதிவை நீக்கினார் நிர்மல்குமார். அதற்குள் அவரது பதிவை ஏராளமானோர் பகிர்ந்து, அது பலரையும் சென்றடைந்தது.
சமூக வலைதளத்தை கண்காணிக்கும் சென்னை காவல்துறை பிரிவு, சிடிஆர் நிர்மல்குமார் மீது புகார் அளித்தது. புகாரின் அடிப்படையில் அதிமுக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications