காவிரி: அறிவித்தபடி சீமான் தலைமையில் அக்.8-ல் 'பெரிய சம்பவம்'- சென்னையில் குவியும் 'தம்பிகள்' படை!
சென்னை: காவிரி நதிநீர் உரிமையை மீட்க வரும் 8-ந் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. அக்டோபர் 15-ந் தேதி வரை தமிழ்நாட்டுக்கு 3,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு. ஆனால் இதனை ஏற்கவே முடியாது என்கிறது கர்நாடகா.

கர்நாடகாவில் போராட்டம்: அதேநேரத்தில் காவிரியில் இருந்து எப்போதும் போல சொற்ப அளவு நீர் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் மண்டியா பந்த், பெங்களூர் பந்த், கர்நாடகா பந்த் என போராட்டங்கள் தொடர்ந்துகின்றன. நாளை கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிடும் போராட்டத்தை வாட்டாள் நாகராஜ் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் படம் அவமரியாதை: கர்நாடகாவில் நடைபெறும் போராட்டங்களில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படம் அவமரியாதை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சீமான் கண்டித்து வருகிறார். இது தொடர்பாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஏன் மவுனமாக இருக்கின்றன எனவும் சீமான் கேள்வி எழுப்பி வருகிறார்.
தமிழ்நாட்டில் போராட்டங்கள்: தமிழ்நாட்டிலும் காவிரி நதிநீர் உரிமைக்காக விவசாயிகள் போராட்டங்களை நடத்துகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டது. அதேபோல தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
அக்.8-ல் போராட்டம்: இதனைத் தொடர்ந்து சென்னையில் அக்டோபர் 8-ந் தேதி பெரிய ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இந்நிலையில் அக்டோபர் 8-ந் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீமான் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications