தப்பி ஓடிய மாஜி.. வீட்டிற்கே போய் செக் வைத்த சிபிசிஐடி.. அதிகாலையில் பதற்றம்.. எங்கே விஜயபாஸ்கர்?
சென்னை: எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் ₹100 கோடி நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ளார்
இந்த நிலையில் அவரின் வீடுகளில் ரெய்டு நடக்கிறது.கரூர் ஆண்டாங்கோயில் மேற்கு ஊராட்சி அம்மன் நகரில் உள்ள அதிமுக தொழில்நுட்ப அணியின் நிர்வாகி கவின் வீட்டிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது 100 கோடி மதிப்பிலான நில அபகரிப்பு வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன் ஜாமீனுக்கு முயற்சித்தார் விஜயபாஸ்கர்.
முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார் விஜயபாஸ்கர். தலைமறைவாகியுள்ள அவரை கைது செய்ய முயன்று வருகின்றனர்.
தேடுதல்: அவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு பக்கம் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சென்னை மற்றும் கரூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகங்கள் , அவரது ஆதரவாளர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தி நிறைய ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. இதில், போலீசார் எதிர்பார்க்காத வேறு விவகாரங்கள் குறித்த டாகுமெண்டுகளும் கிடைத்துள்ளதாம்.
விஜயபாஸ்கரை கைது செய்வதில் போலீசார் தீவிரம் காட்டி வந்தாலும் அவரது இருப்பிடத்தை கண்டுப்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி.க்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுகவின் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் தென்சென்னை மண்டல செயலாளராக இருக்கும் ரவிச்சந்திரன் தான், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எல்லாமுமாக இருந்து வந்தாராம்.
எங்கே இருக்கிறார்: விஜயபாஸ்கர் தொடர்பான அனைத்து ரகசியங்களும் ரவிச்சந்திரனுக்குத் தான் தெரியும். விஜயபாஸ்கரும் ரவிச்சந்திரனும் நகமும் சதையும் மாதிரி. அதனால் அவருக்கு சொந்தமான ஓரிடத்தில் தான் விஜயபாஸ்கர் தலைமறைவாக ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று அந்த ரகசிய தகவல் சொல்கிறதாம். அந்த தகவலை புறந்தள்ளி விடாமல், ரகசியமாக விசாரித்து வருகிறதாம் சி.பி.சி.ஐ.டி.
அதனால், விரைவில் விஜயபாஸ்கரை அரஸ்ட் செய்து விடுவார்கள் என்று அதிமுக வட்டாரங்களில் விவாதிக்கப்படுகிறது
வழக்கு பின்னணி: கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் போலீஸ் மற்றும் எஸ்பி அலுவலத்தில் புகார் தரப்பட்டது.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து, இந்த நிலமோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனால் விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். தன்னுடைய அப்பாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் விஜபாஸ்கரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த நிலையில், எம்.ஆர் விஜயபாஸ்கர் தரப்பில் கரூர் நீதிமன்றத்தில் மீண்டும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார் விஜயபாஸ்கர்.












Click it and Unblock the Notifications