ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர்.. விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாபர் சாதிக் மற்றும் இயக்குநர் அமீர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாபர் ஜாதிக், அமீர் உள்ளிட்டோர் நவம்பர் 11 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் போதைப் பொருட்கள் மூலமாக விற்பனை செய்த பணத்தில் சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்தது.

ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத் துறை வழக்கில் இயக்குநர் அமீர் உள்பட 12 பேர் மீது 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. இந்த வழக்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி கடந்த 18 ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த வழக்கு சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில்வேலவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜாபர் சாதிக், அவரது மனைவி, சகோதரர் மற்றும் இயக்குநர், நடிகர் அமீர், ஜாபர் சாதிக்கின் சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications