CBSE Plus 2 results 2025: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது?
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடம் எழுந்துள்ளது. தற்போது தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் வியாழக்கிழமை வெளியான முடிவுகளால் தாங்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண்களை கொண்டு எந்த கல்லூரியில் கவுன்சலிங்கில் இடம் கிடைக்கும் என்பதை ஊகித்து வைத்திருக்கக் கூடும்.
இதே போல் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களும் தங்களது கட் ஆஃப் குறித்து அச்சத்தில் உள்ளனர். பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வை பொருத்தமட்டில் இயற்பியல் தேர்வு கடினமாகவும் நீளமாகவும் (கால்குலேஷன்கள் போட போட விடை வராமல் வால் போல் நீண்டுக் கொண்டே இருக்கும். இதற்கு நேரம் அதிகம் எடுத்துக் கொள்ளும்) இருந்ததாகவும் தங்களால் ஒரு சில கேள்விகளுக்கு விடையளிக்க முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
பிளஸ் 2 தேர்வுகளை பொருத்தமட்டில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி முடிந்தது. இந்த ஆண்டு இந்தியா மற்றும் 26 நாடுகளில் 7,842 தேர்வு மையங்களில் 42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர்.
இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கட் ஆஃப் குறையுமா, எந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் எழுந்துள்ளன.
அத்துடன் விஐடி, அமிர்தா, என்என்யூ, எஸ்ஆர்எம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் விஐடி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகளும் வந்துவிட்டன. அது போல் அமிர்தா நுழைவு தேர்வின் முதல் கட்ட முடிவுகள், இரண்டாம் கட்ட தேர்வு தற்போது ஞாயிற்றுக்கிழமை வரை நடத்தப்படுகிறது.
சிவநாடாரின் என்என்யூ பல்கலைக்கழகத் தேர்வுகளும் தற்போது தொடங்கியுள்ளன. இந்த தேர்வுகளில் இடம் கிடைக்காவிட்டால் மாணவர்களுக்கு இருக்கும் ஆப்ஷன் கட் ஆஃப் மதிப்பெண்களை கொண்டு கவுன்சலிங்கில் சேர வேண்டியதுதான்.
கவுன்சலிங்கில் தாங்கள் விரும்பிய கல்லூரி கிடைக்காவிட்டால் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர வேண்டிய நிலை உள்ளது. எனவே எதுவாக இருந்தாலும் பிளஸ் 2 ரிசல்ட் வந்தால் மட்டுமே ஒரு முடிவு எடுக்கப்படும்.
கடந்த சில நாட்களாகவே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்து பில்டப் இருந்து கொண்டே வருகிறது. இந்த வாரம் வரும் என்றார்கள், தமிழக பிளஸ் 2 தேர்வு முடிவுகளுடன் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளும் வரும் என்றார்கள், ஆனால் வரவில்லை. தற்போது அடுத்த வாரத்தில் வரும் என சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு மே 13 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் 12 அல்லது 13 ஆம் தேதி வாக்கில் வெளியாகும் என தெரிகிறது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை cbseresults.nic.in., results.cbse.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளத்தில் பார்க்க வேண்டும். ஹோம்பேஜில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 ரிசல்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். தேர்வு எண்ணையும் பிறந்த தேதியைும் கொண்டு லாகின் செய்தால் ரிசல்ட் டிஸ்பிளே ஆகும். பின்னர் இதை அப்படியே டிஜிலாக்கர் கொண்டு டவுன்லோடு செய்து கொள்ளலாம். Digilockerல் போய் தேர்வு முடிவுகளை பார்க்க உரிய லாகின் தகவல்கள் ஏற்கெனவே பள்ளி நிர்வாகம் கொடுத்திருக்கிறது. அதை கொண்டு உள்ளே போய் டவுன்லோடு செய்யலாம்.












Click it and Unblock the Notifications