தமிழகத்தின் புதிய ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ்நாட்டின் புதிய ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஆளுநரை மாற்றினாலும், ஆட்சியை கலைக்க முடியாது. திமுக பெரும்பான்மை உடன் ஆட்சியில் இருக்கிறது, மக்கள் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் புதிய ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் குரல் கொடுத்த தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் எனவும் மேலும் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம்.
தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவியை திரும்பப் பெற வேண்டும். உளவுத்துறையில் பணியாற்றவரை தமிழ்நாட்டுக்கு மாற்றம் செய்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் 25 ஆண்டுகளாக திராவிட கட்சிகளுக்கு எதிராக போராடும் பா.ஜ.க வுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. திராவிட கட்சியை அகற்ற வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கருத்து நிறைவேறாது.
உளவுத்துறையோடு நெருக்கமாக ஒரு உள்ள ஒருவரை தமிழக ஆளுநராக வேண்டுமென்றே மத்திய அரசு நியமித்துள்ளது மத்திய அரசானது இன உணர்வையும் மொழி உணர்வையும் அழிக்கக் கூடிய ஒருவரை மத்திய அரசு ஆளுநராக நியமித்து உள்ளது.
ஜனநாயக முறைப்படி பணியாற்றக் கூடிய ஒருவரை ஆளுநராக பணியமர்த்த வேண்டும் என்ற அவர், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார். யாரை ஆளுநராக கொண்டு வந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாட்டில் ஆட்சியை கலைத்து விடும் தெம்பும் திராணியும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
சிஏஏ சட்டத்திற்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வரவேற்புக்குரியது. அதேபோல் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பிற்கும் எதிராக தீர்மானம் கொண்டு வரவேண்டும் எனவும் தெரிவித்தார். பெண்களுக்கு எதிராக நடக்க கூடிய பாலியல் வன்முறையில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும், இதற்கென தனி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென முதல்வருக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பொறுப்பேற்கவிருக்கும் ஆர்.என்.ரவி பீகாரில் பிறந்தவர். கேரளா பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. ஐபிஎஸ் அதிகாரியான ரவி, காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். குறிப்பாக உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள அஜித் தோவலும் ஆர்.என்.ரவியும் உளவுத்துறையில் ஒன்றாக பணியாற்றியவர்கள். கடைசியாக உளவுத்துறையின் சிறப்பு இயக்குனராக இருந்த ரவி, 2012ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
Recommended Video
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, இதில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் கிளப்பியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனும் ஆளுநர் ஆர்.என் ரவி நியமனம் குறித்து தனது கருத்தை கூறியிருந்த நிலையில், புதிய ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications