Erode Vijay: ஈரோடு கூட்டத்தில் விஜய் பேச்சை கேட்க! "இவங்களாம்" வந்தார்களா? உளவுத் துறை ரிப்போர்ட்! தவெக ஷாக்!
ஈரோடு: ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் பிற கட்சியினரும் பங்கேற்றதாக உளவுத் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய உளவுத் துறையின் தமிழக பிரிவு, கேரளாவில் இருந்தும் சில அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்து ஒரு ஆய்வை நடத்தினர்.
அந்த வகையில் அவர்கள் ஈரோடு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்போது அவர்கள் தெரிவித்த கருத்துகளை அறிக்கையாக மத்திய உளவுத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது குறித்து உளவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக கூட்டத்தில் 41 பேர் பலியாகிவிட்டனர். அந்த கூட்டத்திற்கு பிறகு விஜய் கலந்து கொண்ட ஈரோடு பொதுக் கூட்டத்தை கண்காணித்தோம்.
விஜய் பிரச்சாரம்
விஜய்யின் பிரச்சார கூட்டத்திற்கு அத்தனை பேர் திரண்டார்களே அவர்கள் யார், கரூர் சம்பவத்திற்கு பிறகு பொதுக் கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு 3 மாதங்களாக விஜய்க்கு எந்த பொதுக் கூட்டத்திற்கும் அனுமதி அளிக்கவில்லை.
பொதுமக்கள் கருத்து என்ன
அது குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள், எல்லாவற்றுக்கும் மேல் தவெகவினர் என்ன நினைக்கிறார்கள் உள்ளிட்ட 30 கேள்விகள் ஈரோடு கூட்டத்தில் கலந்து கொண்டோரிடம் கேட்கப்பட்டன. ஈரோடு கூட்டத்திற்கு 43 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
விஜய்க்காக 15 ஆயிரம் பேர்
இதையும் தாண்டி விஜய்க்காக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதிலும் அந்த ஈரோடு கூட்டத்தில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 35 வயதுக்குள்பட்டவர்கள், கூட்டத்திற்கு வந்தவர்களின் வாகனங்கள் எங்கே நிறுத்தப்பட்டுள்ளன என்பதை பார்த்தோம்.
பிற கட்சியினர்
அப்போது பல்வேறு வாகனங்களில் பிற கட்சி சின்னம், பிற கட்சிகளின் தலைவர் படம், கட்சி கொடி பொருத்தப்பட்டிருந்தது. வந்தவர்கள் பிற கட்சியினராக இருந்தாலும் இவர்கள் விஜய்யை பார்க்க வேண்டும் என்பதற்காக வந்திருந்ததாக கூறினர்.
70+30 சதவீதம்
விஜய் நடத்திய ஈரோடு பொதுக் கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 70 சதவீதம் பேரும், அண்டைய மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்து 30 சதவீதம் கலந்து கொண்டனர் என்பது தெரியவந்தது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதே போல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் கூட்டணி உறுதியாகிவிட்டது, பிள்ளையார் சுழி போட்டாச்சு என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த போது தவெக கொடியை ஒரு இளைஞர் அசைத்தார். பின்னர் விசாரணையில் அவர் அதிமுக கொடி இடம் பெற்றிருந்த டீ சர்ட்டை அணிந்திருந்ததால் அவர் அதிமுககாரர் என சொல்லப்பட்டது. ஆனால் இதை அதிமுக தரப்பு மறுத்தது.
தேர்தல் எப்போது
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மே மாதம் தேர்தல் முடிவுகள் வெளியிடக் கூடும் என தெரிகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலம் இருப்பதால் அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விஜய் நடத்தும் கூட்டங்கள்
அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யும் பிரச்சாரம், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் திமுகவை கடுமையாக எதிர்த்து பேசுகிறார். ஆனால் அதிமுக குறித்து வாய் திறப்பதில்லை, பாஜக குறித்தும் பேசுவதில்லை.
திமுகவை கடுமையாக விமர்சிக்கும் விஜய்
மத்திய அரசை சொல்ல வேண்டுமே என்பதற்காக சும்மா ஏதாவது சொல்லிவிட்டு, திமுகவைத்தான் அதிகம் விமர்சிப்பார். இந்த தேர்தலில் விஜய்யின் தவெக ஓட்டுக்களை பிரிக்கும் என சொல்லப்படுகிறது. விஜய்யால் முதல்வராக முடியாவிட்டாலும் முடிந்த வரை மற்ற கட்சியின் வெற்றியை தடுக்கும் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications