திமுகவிற்கு அடுத்தடுத்து பதிலடி கொடுக்கும் மத்திய அமைச்சர்கள்.. ஒரே நாளில் இரண்டு சம்பவங்கள்
சென்னை: நேற்று ஒரே நாளில் திமுகவிற்கு அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்குப் போதிய நிதியைத் தாமதமின்றி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி பதிலடி கொடுத்தார். அதேபோல் திமுக எம்பி வில்சனுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்குப் போதிய நிதியைத் தாமதமின்றி வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாகவே, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நிலம் கையகப்படுத்துவதில் மாநில அரசு காட்டும் தாமதமே திட்டங்கள் முடங்கக் காரணம் என்று தனது விளக்கத்தில் கூறினார். இது தொடர்பாக தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி மற்றும் தற்போதைய நிலை குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட விளக்கத்தில், "2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ. 7,611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2014-ஆம் ஆண்டிற்கு முன்பு வழங்கப்பட்ட சராசரி நிதியை விட 8.5 மடங்கு அதிகம் ஆகும்.
நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சவால்கள்: தமிழகத்தில் ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்த மொத்தம் 4,326 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. ஆனால், இதுவரை 1,052 ஹெக்டேர் நிலம் மட்டுமே மாநில அரசால் கையகப்படுத்தி வழங்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதமே திட்டங்கள் மெதுவாக நடைபெற முக்கிய காரணமாக உள்ளது.
மதுரை - தூத்துக்குடி (அருப்புக்கோட்டை வழியாக) புதிய பாதை: இத்திட்டத்திற்குத் தேவையான நிலத்தில் 91 சதவீதம் இன்னும் கையகப்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை புதிய பாதை: இத்திட்டத்திற்கு 86 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்.
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய பாதை: 2019-இல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இத்திட்டம், மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது. தமிழகத்தில் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் 77 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்புப் பணிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 18 ரயில் நிலையங்களில் பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது தமிழகத்தில் 9 வந்தே பாரத் ரயில்களும், 9 அம்ரித் பாரத் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை கடற்கரை - எழும்பூர் 4-வது வழித்தடம், தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது வழித்தடம், அம்பத்தூர், வில்லிவாக்கம் 5வது, 6வது வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
இதனிடையே திமுக மாநிலங்களவை எம்பியும், பேசும் போது, "தமிழகம் மத்திய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். அப்போது அவர் கூறும் போது, "2026-27 மத்திய நிதிநிலை அறிக்கையை வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கானதாக என்ற மத்திய அரசின் கூற்று, உண்மைக்கு புறம்பானது. பெயரளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சியை 10 சதவீதமாகவும், மொத்த செலவினத்தை ரூ. 53.47 லட்சம் கோடியாகவும், நிதிப் பற்றாக்குறை இலக்கை 4.3 சதவீதமாகவும் மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்தியாவின் கடன் ரூ. 215 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.
இந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4.4 சதவீதத்திலிருந்து அடுத்த ஆண்டு 4.3 சதவீதமாக மட்டுமே குறையும் என்றும், மத்திய அரசின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 56.1 சதவீதத்திலிருந்து 55.6 சதவீதமாகக் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் சென்றால், என்.கே. சிங் குழுவால் இலக்கிடப்பட்ட 40 சதவீதத்துக்கு கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தைக் குறைக்க பல ஆண்டுகள் ஆகலாம்.
அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றம் கொண்டாடுகிறது, ஆனால் இந்தியாவிடம் இருந்து இன்னும் நாங்கள் விரிவாகக் கேட்டறியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்காவிடம் முற்றிலும் சரணடைந்திருப்பது குறித்த மிகுந்த அதிருப்தியில் உள்ளோம்.
ரயில்வே அமைச்சா் 2014-ஆம் ஆண்டு முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியுடன் ஒப்பிடும்போது தமிழகத்துக்கான ரயில்வே நிதி ஒதுக்கீடு 7.5 மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறுகிறாா். ஆனால் யதாா்த்தத்தில் 2014-ஆம் ஆண்டு முதல் தேசிய ரயில்வே நிதிநிலைதான் 25 மடங்கு அதிகரித்துள்ளது, தமிழகத்துக்குக் கிடைத்தது வெறும் 7.5 மடங்கு மட்டுமே. மிகவும் அவசியமான கோயம்புத்தூா் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. பல ஆண்டுகளாக, வரிப் பகிா்வு குறித்த மத்திய அரசின் அணுகுமுறை, தமிழ்நாடு உட்பட வளா்ந்த மற்றும் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்குத் திட்டமிட்டு பாதகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சிக்கு மாநிலங்களின் பங்களிப்பை பதினாறாவது நிதிக் குழு ஒப்புக்கொண்டபோதிலும், தமிழகத்தின் பங்களிப்பை அது போதுமான வகையில் அங்கீகரிக்கத் தவறிவிட்டது. ஜல் ஜீவன் திட்டத்தை எடுத்துக்கொண்டால், தமிழகம் கோரிய ரூ. 3,112 கோடி இன்னும் விடுவிக்கப்படவில்லை. நிதிநிலை அறிக்கையில் குறைந்தபட்சம் தமிழ்நாடு என்ற ஒரு வாா்த்தையைக் கூட குறிப்பிடவே இல்லை " இவ்வாறு வில்சன் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வில்சனின் குற்றச்சாட்டுகள் "ஆதாரமற்றவை" என்று கூறியதுடன் பட்ஜெட்டில் தமிழகத்திற்காக உள்ள திட்டங்களைப் பட்டியலிட்டார்:
அரிய வகை கனிமங்கள் வழித்தடம் : இந்த முக்கியமான பொருளாதார வழித்தடம் தமிழகத்திலும் அமைய உள்ளது. இது மின்னணு மற்றும் மின்சார வாகன உற்பத்திக்கு உதவும்.
பெண்கள் விடுதி: நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெண்கள் விடுதி கட்டப்படும் என்ற அறிவிப்பு தமிழகத்திற்கும் பொருந்தும்.
ஆழ்கடல் மீன்பிடிப்பு: ஆழ்கடல் மீன்பிடிப்புத் திட்டத்தின் கீழ் மீனவர்கள் பயன்பெறுவார்கள். அவர்கள் பிடிக்கும் மீன்கள் 'ஏற்றுமதி' தரத்திற்கு இணையாகக் கருதப்படும். இது தமிழக மீனவர்களுக்குப் பெரிய பலன் தரும்.
தேங்காய் மேம்பாட்டுத் திட்டம்: தென்னை விவசாயம் செழித்துள்ள தமிழகத்திற்கு இந்தத் திட்டம் பெரும் உதவியாக இருக்கும்.
அதிவேக ரயில் : சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - ஹைதராபாத் ஆகிய நகரங்களை இணைக்கும் அதிவேக ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா: பழங்கால நாகரிகத் தலமான ஆதிச்சநல்லூர் மேம்பாடு மற்றும் பழவேற்காடு ஏரியில் பறவைகள் காப்பக சுற்றுலாத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
அரைக் கிணறை தாண்டிய அறிவாலயம்.. அடம் பிடித்த கட்சிகளை கூட்டணியில் அடைத்த திமுக! யாருக்கு எவ்வளவு? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள்












Click it and Unblock the Notifications