சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக ஆளும் மாநிலங்களும் தவிக்கின்றன.. நிதிஒதுக்கீட்டில் வேகம் தேவை.. தாராளம் காட்டட்டும் மத்திய அரசு

மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்

Google Oneindia Tamil News

சென்னை: 2வது கட்டமாக ஒதுக்கியிருக்கும் நிதிகூட போதாது என்ற புலம்பல்கள் மாநிலங்களில் இருந்து எழ தொடங்கி உள்ளன.. போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்காமல் இருப்பதால் பாஜகஆளும் மாநிலங்களே திணறுவதாக சொல்கிறார்கள்.

Recommended Video

    PM Modi announces Economic Pakckage | ரூ.20 லட்சம் கோடி நிவாரண பேக்கேஜ்.. பிரதமர் மோடி மாஸ் பிளான்

    முதல்கட்டமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா நிதி அறிவித்தபோதே நமக்கு அது யானை பசிக்கு சோளப்பொறியாக இருந்தது.

    உபி உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதில் ஓரளவுகூட தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை என்று பகிரங்கமாகவே எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

     17ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிப்பு.. ஆனால் வேறு மாதிரி.. முதல்வர்களிடம் மோடி கூறியது என்ன? 17ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிப்பு.. ஆனால் வேறு மாதிரி.. முதல்வர்களிடம் மோடி கூறியது என்ன?

    பிரதமர்

    பிரதமர்

    இதுவரை 4 முறை வீடியோ கான்பரன்சில் பிரதமரிடம் மாநில முதல்வர்கள் பேசியுள்ளனர்.. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த தங்கள் மாநில பிரச்சனைகளையும், அதை சமாளிப்பதற்கான நிதியுதவியையும் நேரடியாகவே கேட்டனர்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதை தொடர்ந்து வலியுறுத்தியபடியே வருகிறார்.. நிதியுதவி மட்டுமில்லை, பிசிஆர் கிட்-களும் நமக்கு அதிகம் தேவைப்படுவதாக சொல்லி வருகிறார்.. எப்போதோ நாம் ஆர்டர் கொடுத்தும் இன்னும் அது நம் கைக்கு வந்தும் சேரவில்லை.

    மருத்துவ பரிசோதனை

    மருத்துவ பரிசோதனை

    மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் நிறைய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.. அதற்கான மையங்களும் நிறைய உள்ளன என்பதை மறுக்க முடியாது.. ஆனாலும் பரிசோதனை கருவிகள் நமக்கு குறைவாக உள்ளன.. சென்னை போன்ற இடங்களுக்கே அது போதாமல் உள்ளது.. இந்நிலைமையை விலாவரியாக முதல்வர் எடுத்து சொல்லியும் அது குறித்த நடவடிக்கை என்னவென்று தெரியவில்லை.

    பாஜக ஆளும் மாநிலங்கள்

    பாஜக ஆளும் மாநிலங்கள்

    ஒதுக்கப்பட்டுள்ள நிதி நிச்சயம் நமக்கு போதாது.. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி வழங்கப்படுவதாக ஒரு பேச்சு எழுந்தாலும், போதிய நிதியை அரசு ஒதுக்காமல் இருப்பதால் பாஜகஆளும் மாநிலங்களே திணறுகின்றன என்பதே தற்போதைய உண்மை. அந்த மாநிலங்களுக்கே இந்த நிலை என்றால், பிற மாநிலங்களின் நிலையை சொல்ல வேண்டியதில்லை... அதனால் கொரோனா ஒழிப்பு போரில் ஈடுபட்டுள்ள அனைத்து மாநிலங்களுக்குமே மத்திய அரசு விரைந்து தாராள உதவியை செய்ய வேண்டும்.. நோய் தொற்று பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கு முன்னுரிமை தர வேண்டிய நிலை உள்ளது.

    பொருளாதார சரிவு

    பொருளாதார சரிவு

    பொருளார சரிவு, வருவாய் இழப்பு, மந்த நிலை போன்ற எத்தனையோ இடர்களுக்கு நடுவே மத்திய அரசு ஒதுக்கப்படும் நிதியும் கிடுக்கிப் பிடி போட்டு கண்காணிக்க வேண்டும்.. இப்போதைய அபாயகரமான சூழலில் ஒதுக்கும் நிதி அத்தனையும் பல உயிர்களை காக்கக்கூடியது.. இவ்வாறு நிதியை ஒதுக்கினால், அந்தந்த மாநில அரசுகளும் விரைவாக செயல்டும்.. மக்களும் பலன் அடைவர்.. கொரோனா போரிலும் வெல்ல முடியும்.

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    ஒருவேளை இது நடந்தால், நிச்சயம் இந்த நல்ல பெயர் அத்தனையும் மத்திய அரசுக்கே குறிப்பாக பிரமருக்கே போய் சேரும்.. அதனால் நிதியுதவியை தாமதிக்காமல் மத்திய அரசு உதவ முன்வரவேண்டும்.. நிதியை ஒதுக்காவிட்டால் எத்தனையோ மாநில அரசுகள் தர்மசங்கடத்துக்கு ஆளாக நேரிடும்.. இதனால் மக்களின் நம்பிக்கையையும் விரைவில் இழந்துவிடக்கூடும் சங்கடமும் ஏற்படும் என்பதையும் மறுக்க முடியாது!!

    English summary
    coronavirus: There is a need for the central gov to provide sufficient funds to the state governments
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X