அலர்ட்! 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை! இத்தனை மாவட்டங்களிலா? கவனம் மக்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை கடந்த 29ஆம் தேதியே தொடங்கிய நிலையில் தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது.

3 மணி நேரத்தில் மழை

3 மணி நேரத்தில் மழை

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் கூறப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

கனமழைக்கு வாய்ப்பு

மேலும் டெல்டாவின் திருவாரூர், நாகை, ராமநாதபுரம் மற்றும் வடக்கில் சென்னை, திருவள்ளூர் உள்பட 19 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விழுப்புரத்தில் மழை

விழுப்புரத்தில் மழை

விழுப்புரம், கோலியனூர், முண்டியாம்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் மரக்காணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ததன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து குறைவு

நீர்வரத்து குறைவு

தமிழகத்தில் நல்ல மழை பெய்து வந்த போதிலும் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதரமான புழல் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது. நேற்று 373 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று 292 ஆக சரிந்ததுள்ளது. குடிநீருக்காக ஏரியில் இருந்து 159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதே நேரத்தில் சோழவரம் ஏரிக்கு நீர் வரத்து 177ல் இருந்து 299 கன அடியாக அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+