Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேயர் தேர்தலில் தில்லுமுல்லு! எம்.பி. தேர்தல் நேர்மையா நடக்குமா? EVM தயாரிப்பில் பாஜக அதிகாரிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக முறைகேடுகளைச் செய்யலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டாக இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தின. இந்தக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு நிலவியதால், குல்தீப் குமார்தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

chandigarh mayor election: Will 2024 Lok Sabha Elections Be Fair?

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டாக இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தியன. இந்தக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு நிலவியதால், குல்தீப் குமார்தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

ஓட்டுகளை எண்ணுவதற்காக நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி விழுந்த ஓட்டுக்களில் 8 ஓட்டுகளை மட்டும் செல்லாதவை என்று அறிவித்துவிடுகிறார். அந்த ஓட்டுகள் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவான ஓட்டுகள். அதன்பின்னர் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்தார். அவரது செயல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அது தொடர்பாக ஒரு வீடியோ நாடு முழுவதும் சமூக வலைத்தளத்தில் வைரலாக ஆனது. ஒரு மேயர் தேர்தலைக் கூட ஜனநாயக பூர்வமாக நடத்த விடாமல் பாஜக சதி செய்வதாகப் பலரும் குற்றஞ்சாட்டினர். இந்த அப்படமான முறைகேட்டை எதிர்த்து ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் அதிகாரியாக அமர்த்தப்பட்ட அனில் மசிஹ் என்பவரை நீதிமன்றத்திற்கு அழைத்து நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது அவர், 'அந்த 8 ஓட்டுகள் செல்லாதவை என்பதால் அதன் மீது என் பேனாவைக் கொண்டு கோடு போட்டு அடித்தேன்' என்று வாக்குமூலம் அளித்தார்.

ஆனால், இவரது வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. கோடு போட்டு அடிக்கப்பட்ட வாக்கு சீட்டுகளையும் வெளியான வீடியோவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஆணை பிறப்பித்தனர்.

அதனைக் கொண்டு அந்த வாக்குச் சீட்டுகளையும் வீடியோவையும் முழுமையாகப் பரிசோதித்த பின் நீதிமன்றம் 'தேர்தல் அதிகாரியான அனில் தில்லுமுல்லு செய்துள்ளார். ஆம் ஆத்மி வேட்பாளரின் வெற்றியைத் தடுத்துவிட்டு, பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக முறைகேடாக அறிவித்திருக்கிறார்' என்று கூறிய நீதிபதிகள், பாஜக வேட்பாளரின் வெற்றியைச் செல்லாது என்று சட்டப்பிரிவு 142 இன் படி அறிவித்தனர்.

இந்தச் சட்டப்பிரிவு 142 என்பது உச்சநீதிமன்றத்திற்கு அதிகப்படியான அதிகாரத்தை அளித்துள்ளது. எங்கே எல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ அதைத் துடைப்பதற்கும் முழுமையான நீதியை நிலைநாட்டுவதற்கும் இந்தச் சட்டப் பிரிவு 142 ஐ உச்சநீதிமன்றம் மட்டுமே பயன்படுத்தலாம் என்று அதிகாரத்தை அரசியல்சாசனம் கூறியுள்ளது. அப்படியான ஒரு சிறப்பான சட்டத்தைப் பயன்படுத்தி இந்தத் தீர்ப்பை நீதிபதிகள் வழங்கி உள்ளனர்.

அந்தச் சட்டப்பிரிவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் குதீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

chandigarh mayor election: Will 2024 Lok Sabha Elections Be Fair?

மேலும் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை அளித்தமைக்காக உச்சநீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 340இன் கீழ் தேர்தல் அதிகாரியான அனில் மீது நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம் ஆத்மி இந்த மேயர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. ஆகவே மறுதேர்தலை நடத்த வேண்டும் என்றுதான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. ஆனால், தேர்தல் அதிகாரியே தவறை ஒப்புக்கொண்டுவிட்டார். அதனால் அவர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் கூறிவிட்டது.

chandigarh mayor election: Will 2024 Lok Sabha Elections Be Fair?

ஆனால், மறுதேர்தலை நடத்தாமல், மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடாமல் ஆம் ஆத்மி வேட்பாளரையே வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டது. இது மிகப்பெரிய தீர்ப்பு.

இந்தத் தீர்ப்பை ஒட்டி விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் நியாயமாக நடக்குமா? அல்லது அதிலும் பாஜக தில்லுமுல்லு செய்யுமா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. அந்தச் சந்தேகத்திற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதைப்பற்றிப் பல உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.

"தேர்தல் நடத்திய அதிகாரி நேரடியாக மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டவர். காரணம், சண்டிகர் என்பது பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களின் தலைநகர். இவை இரண்டும் யூனியன் பிரதேசங்கள். ஆகவே தலைநகரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

chandigarh mayor election: Will 2024 Lok Sabha Elections Be Fair?

தேர்தல் முறைகேடு நடந்து உச்சநீதிமன்றத்திற்கு வழக்கு சென்ற உடனேயே பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா செய்தார். அவர்தான் சண்டிகர் நகரத்தின் நிர்வாகி. ஆகவே, அப்போதே முறைகேடு என்பது பாதி உண்மையாகிவிட்டது.

இது வெறும் 35 வாக்குகளைக் கொண்ட சாதாரண மேயர் தேர்தல். இதிலேயே இந்தளவுக்குத் தில்லுமுல்லு செய்ய பாஜக துணிகிறது என்றால், நாளை நடக்கப்போகும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் நிலைமை என்ன? அதுதான் பயமாக இருக்கிறது?

வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தயாரிக்கின்ற அரசு நிறுவனத்தில் 4 தனியார் இயக்குநர்கள் பாஜக அரசு சார்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். இப்படி நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.

chandigarh mayor election: Will 2024 Lok Sabha Elections Be Fair?

இந்த 4 பேரும் பாஜகவில் வெவ்வேறு பெரிய பதவிகளிலிருந்தவர்கள். ஒருவர், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் பீகாரைச் சேர்ந்தவர். மற்றொருவர், குஜராத்காரர். இந்த மூன்று பேர் போக மீதம் ஒருவர்.

இப்படி பாஜகவில் நேரடியாகத் தொடர்பிலிருந்த நான்குபேரை அரசு நிறுவனத்தின் இயக்குநர்களாக நியமிப்பதால் என்ன நடக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அது நியாயமான அச்சம்தான். அதற்குப் பதிலளிக்கக் கூடிய பொறுப்பு பாஜக அரசுக்குத்தான் உள்ளது" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+