நானும் ரவுடிதான்.. மலேசிய தூதுவரானதும் எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டேன்.. கெத்து காட்டும் சாந்தினி
சென்னை: கல்லூரியில் படிக்கும் போது நான் பெரிய ரவுடிதான். நான் மலேஷியா தூதுவரான பிறகு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் அமைதியாக இருக்கிறேன் என நடிகை சாந்தினி தெரிவித்துள்ளார்.
நடிகையும் மலேசிய தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரியுமான சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் தெரிவித்துள்ளார். அவருடன் 5 ஆண்டுகள் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மணிகண்டனிடம் விசாரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் சாந்தினியும் அவருக்கு கருக்கலைப்பு செய்த கோபாலாபுரம் தனியார் மருத்துவமனையின் மருத்துவர் அருணுடன் அவர் பேசிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சாந்தினி
அந்த ஆடியோவில் சாந்தினி, அருணிடம் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் குறித்து பேசியுள்ளார். அதிமுக ஆட்சியில் பேசப்பட்ட அந்த ஆடியோவில் சாந்தினி, டாக்டர் அருணிடம் கூறுகையில், நான் ஒன்று ரோட்டில் நிற்கும் பெண் கிடையாது. தூதரகத் தொடர்புடன் அரசு பதவியில் இருப்பவர். நான் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்.

புகார்
நான் அவருடன் பேசினால் எனக்கு முறையாக பதில் அளிப்பதே இல்லை. இதனால் சென்னைக்கு வந்து அனைத்து ஆதாரங்களையும் வைத்து முதல்வரிடம் புகார் அளிப்பேன். கருக்கலைப்பு செய்த காரணத்தினால் உங்களுடயை பெயரை நான் எந்த வகையில் இழுக்க மாட்டேன். மணிகண்டனுக்காக மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலில் சிறப்பு பூஜை, வேண்டுதல்களை செய்தேன்.
Recommended Video

அவதூறு
இதனால் எனது எடை குறைந்தது. ஆனால் நான் பலருடன் தவறாக பழகியதால்தான் எனது உடல் எடை குறைந்ததாக மணிகண்டன் அவதூறாக பேசினார். அமைச்சர் பதவி போக போகிறது என்பதை முன்கூட்டியே தெரிவித்தேன். ஆனால் அவர் நம்பவில்லை. மணிகண்டன் யாருக்கும் எந்த உதவியையும் செய்யாத அளவுக்கு மோசமானவர்.

அமைதி
கல்லூரி காலத்தில் நான் மிக பெரிய ரவுடி. நான் மலேசிய தூதுவரான பிறகு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் அமைதியாக இருக்கிறேன். அமைச்சர் மணிகண்டன் என்னை தொடர்பு கொள்ளாவிட்டால் பரவாயில்லை. என்னை பலர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இவ்வளவு ஏன் மலேசிய நாட்டு ராஜாவே என்னை பின் தொடர்கிறார் என சாந்தினி பேசியுள்ளார்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications