யாரிந்த "புரந்தேஸ்வரி"? இந்திய அரசியலை திரும்பி பார்க்க வைக்கும் பெண்? அமித் ஷாவே வாட்ச் பண்ணுறாராமே
சென்னை: சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் பாஜக கூட்டணியில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவியை பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். சபாநாயகர் பதவியை பெறுவதற்கான ரேஸில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலையில் இருக்கிறதாம்.
2024 லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் லோக்சபா ஸ்பீக்கர் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. லோக்சபா சபாநாயகர் பதவியை தேர்வு செய்வது கடினமானது. சபாநாயகர் பதவி கட்சி சார்பற்றதாக இருக்க வேண்டும். அதே சமயம் மைனாரிட்டி அரசு அமையும் போது, கூட்டணி ஆட்சியின் போது ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் அபாயம் உள்ளது.

முக்கியமாக நம்பிக்கையில்லா தீர்மானம், குதிரை பேரம், எம்பிக்கள் தகுதி நீக்கம் போன்ற சம்பவங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் சபாநாயகர் பதவி முக்கியமானதாக மாறும்.
தீவிர முயற்சி: இதில், சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் பாஜக கூட்டணியில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவியை பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆந்திர மாநில பாஜக தலைவரும், ராஜமுந்திரி எம்.பி.யுமான டக்குபதி புரந்தேஸ்வரி 18வது மக்களவையில் சபாநாயகர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார். இவரை சபாநாயகராக்க வேண்டும் என்று பாஜக காய் நகர்த்தி வருகிறதாம். இதனால் இவரை பற்றிய "ஹிஸ்டரியை" டெல்லி பாஜக ஆய்வு செய்து வருகிறதாம். அதோடு அமித் ஷாவும் இவர் நெருக்கமாக "வாட்ச்" செய்து வருகிறாராம்.
இவர் வேறு யாரும் இல்லை, ஆந்திர பிரதேசத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர். இந்த தேர்தலில் ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியில் வென்றார். TDP நிறுவனர் NT ராமாராவின் மகள் ஆவார். காங்கிரசில் இருந்தவர் ஆந்திரா பிரிவதை எதிர்த்து பாஜகவில் இணைந்தார். அதற்கு முன் 2009 இல் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் மாநில அமைச்சராகவும் , 2012 இல் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் துணை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.
யார் இவர்; மே 1943 இல், 20வது வயதில், ராம ராவ் பசவ ராம தாரகம் என்ற பெண்ணை மணந்தார். இது அவரின் முதல் திருமணம். அவர்களுக்கு பன்னிரண்டு குழந்தைகளை. எட்டு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள். அவர்கள் ராமகிருஷ்ண சீனியர், ஜெயகிருஷ்ணா, சாய்கிருஷ்ணா, ஹரிகிருஷ்ணா, மோகனகிருஷ்ணா, பாலகிருஷ்ணா, ராமகிருஷ்ணா ஜூனியர், ஜெயசங்கரகிருஷ்ணா, கரபதி லோகேஸ்வரி (மகள்), டகுபதி புரந்தேஸ்வரி (மகள்), நாரா புவனேஸ்வரி (மகள்), மற்றும் கண்டமனேனி உமாமகேஸ்வரி (மகள்)..
இதில் டகுபதி புரந்தேஸ்வரிதான் இப்போது பாஜக தலைவர். நாரா புவனேஸ்வரிதான் தெலுங்கு தேசம் தலைவர் சந்திர பாபு நாயுடுவின் மனைவி.
இப்போது புரந்தேஸ்வரியைதான் சபாநாயகராக பாஜக கொண்டு வருகிறது. இதன் மூலம் தெலுங்கு தேசத்திற்கு சபாநாயகர் பதவி கொடுக்காமல் சமாளிக்கலாம் என்று பாஜக நினைக்கிறது. பாஜகவிற்கு சபாநாயகர் பதவி + தெலுங்கு தேசத்தையும் சமாளிக்கலாம் என்பது அமித் ஷா திட்டம். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.
நாயுடு திட்டம்: இப்படிப்பட்ட நிலையில்தான் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் ஸ்பீக்கர் போஸ்டை பாஜக கூட்டணியில் பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இரண்டு பேருமே "சபாநாயகர்" பதவியை தங்களுக்கான "இன்சூரன்ஸ்" ஆக பார்க்கின்றனர்.
கடந்த 10 வருடங்களில் பாஜக பல அரசுகளை கவிழ்த்து இருக்கிறது. பல மாநில அரசுகளை கவிழ்த்து உள்ளது. பல மாநில கட்சிகளின் லோக்சபா எம்பிக்கள் அணி மாறுவதற்கு பாஜக உதவியாக இருந்துள்ளது. பல கட்சிகளை உடைத்தும் உள்ளது. நாடாளுமன்றத்தில் இது நடக்காமல் இருக்க சபாநாயகர் பதவியை பெற பாஜக தீவிரமாக திட்டமிட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications