நிலவில் தெரிந்த அதிசயம்.. மொத்த உலகத்திற்கும் சர்ப்ரைஸ் கொடுத்த இஸ்ரோ! இந்தியா கலக்குதே!
சென்னை: நிலவில் நீர் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்களை இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருகிறது. அப்போது முதல் சேமிக்கப்பட்ட தகவல்களை ஆய்வு செய்து பார்த்ததில், நிலவில் நீர் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
நிலவில் நீர் இருக்கிறதா? இல்லையா என்பதை, அங்கு இறங்கி சென்று நம்மால் ஆய்வு செய்ய முடியாது. மனிதர்களுக்கு பதிலாக ரோவர்களை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர்.

ரோவர்களும் சிக்கலும்
ரோவரை பயன்படுத்துவதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. ரோவர்களால் குறைவான நேரத்தில் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. எனவே இந்த பிரச்சனையை ஓவர்கம் செய்ய, ஆர்பிட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவும் சந்திரயான்-2 ஆர்பிட்டரை பயன்படுத்தி நீர் இருக்கும் இடத்தை தேடி வந்தது. இந்நிலையில் நீர் இருக்கும் இடம் பற்றிய மேப்பை இஸ்ரோ தயாரித்திருக்கிறது. அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் இந்த மேப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.
கூகுள் மேப் போல.. நிலவுக்கு மேப்
சாதாரண கூகுள் மேப் போல இந்த மேப் இருக்காது. 'போலரிமெட்ரிக், எல்-பேண்ட் ரேடார்' வடிவத்தில் இந்த மேப் இருக்கும். அதாவது, ரேடார் அலைகளை அனுப்பி அது திரும்பி வரும் வேகத்தையும், அளவையும் கொண்டு இந்த வரைபடங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக DFSAR எனப்படும் உயர்ந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இருட்டில் கையை வைத்து தடவி, எந்த பொருள் எங்கே இருக்கிறது என்று தெரிந்துக்கொள்கிறோமே அது மாதிரிதான் இந்த தொழில்நுட்பம் செயல்படுகிறது.
மின்காந்த அலைகள்
ரேடார் கருவிகள் வெளியிடும் மின்காந்த அலைகள் குறிப்பிட்ட திசையில் அதிர்வுறும். இதைத்தான் போலரிசேஷன் என்று சொல்கிறார்கள். இஸ்ரோ பயன்படுத்தும் DFSAR ரேடார் கருவியானது, வட்ட வடிவத்தில் சுழலும் விதத்தில் அலைகளை நிலவின் மீது அனுப்புகிறது. இப்படி செய்யும்போது இரண்டு ரிசல்டுகள் நமக்கு கிடைக்கும்.
1. அனுப்பியபடியே வட்ட வடிவத்தில் அலைகள் வரும்
2. அனுப்பப்பட்ட அலைக்கு நேரெதிராக சுழலும் திசையில் அலைகள் வரும்
நீர் இருப்பதற்கான ஆதாரம்
இதை வைத்து கல், மண், பாறை எங்கெல்லாம் இருக்கிகிறது? பனிக்கட்டி, நீர் எங்கு இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்துக்கொள்ள முடியும். அனுப்பியபடியே அல்லது அதைவிட குறைவான வேகத்தில் அலைகள் திரும்பி வந்தால் அங்கு மண் தரை இருக்கிறது என்று அர்த்தம். அதுவே அனுப்பப்பட்ட அலைக்கு நேரெதிராக பலமுறை சுழன்று அலைகள் வந்தால், அங்கு பனிக்கட்டி இருக்கிறது என்று அர்த்தம். இப்படித்தான் நிலவில் நீர் இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்திருக்கிறார்கள்.
இதை ஏற்கெனவே அமெரிக்க விஞ்ஞானிகள் உறுதி செய்துவிட்டனர். இருப்பினும், இந்தியா சொந்தமாக இந்த கண்டுபிடிப்பை நடத்திருப்பிருப்பது சாதனை மிக்கதாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications