வீடியோ காலில் "நர்ஸ்" அட்டூழியம்.. "பிஞ்சு" சடலத்தை வைத்து அழுத அப்பா.. கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு செவிலியர்கள் பிரசவம் பார்த்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் இல்லீடு கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் முரளியின் மனைவி புஷ்பா கர்ப்பம் ஆனார். இதையடுத்து மனைவியை அவ்வப்போது செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்று இவர் சோதனை செய்துவந்துள்ளார்.

கர்ப்பம்
மனைவி, கரு இரண்டும் நல்ல ஆரோக்கியமாக இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு இந்த மாதம் இறுதியில் குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் நாள் குறித்து உள்ளனர். ஆனால் அதற்கு முன்பாக நேற்றே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாது என்பதால் ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு மனைவியை முரளி கூட்டி சென்றுள்ளார்.

மரணம்
சூனாம்பேடு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு புஷ்பாவை கூட்டி சென்று, அங்கே அட்மிட் செய்துள்ளார். ஆனால் அங்கே இருக்க வேண்டிய மருத்துவர் அப்போது இல்லை. இரண்டு செவிலியர்கள் மட்டுமே அங்கு இருந்துள்ளனர். இரண்டு பேருமே பெரிதாக அனுபவம் இல்லாதவர்கள். இந்த நிலையில் மருத்துவருக்கு போன் செய்து வர சொல்லி உள்ளனர். ஆனால் அவர் வேறு ஊரில் இருந்ததால் வர தாமதம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

புஷ்பா
அதற்குள் புஷ்பாவிற்கு வலி அதிகம் ஆகி உள்ளது. இதையடுத்து செவிலியர்கள் பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளனர். செவிலியர்கள் இரண்டு பேரும் சேர்ந்து பிரசவம் பார்த்து உள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் வீடியோ காலில் மருத்துவருக்கு போன் செய்து, அதன் மூலம் பிரசவம் பார்த்துள்ளனர். இவர்கள் இரண்டு பேருக்குமே அனுபவம் இல்லாததால் பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

என்ன நடந்தது?
இதன் காரணமாக குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. குழந்தை பிறக்கும் போது எதோ தவறு நடந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதி மக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் முன் போராட்டத்தில் குதித்தனர். இறந்த குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications