செங்கல்பட்டில் "பேரிடி".. முதலிரவு ரூமில் நுழைந்த மாப்பிள்ளை திடீர்னு அந்த சத்தம்.. இப்படிகூட நடக்குமா?
செங்கல்பட்டு: முதலிரவு அறைக்குள் புது மண தம்பதியினர் நுழைந்துள்ளனர்.. அப்போது நடந்த அதிர்ச்சி சம்பவம், ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் அதிர வைத்து வருகிறது.
அருகே முதலிரவிற்கு சென்ற புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மணப்பெண், உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்வேதா : ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன்.. 28 வயதாகிறது.. இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து பணியாற்றி வந்தார். சரவணன் ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.. ராஜராஜேஸ்வரி என்பது ஸ்வேதாவின் இயற்பெயர்.
செங்கல்பட்டு அடுத்த திம்மாவரத்தை சேர்ந்தவர் இந்த ஸ்வேதா.. இவரும் சரவணனை உயிருக்கு உயிராக காதலித்தார்.. இறுதியில் இருவருமே தங்கள் வீடுகளில் காதல் விவகாரத்தை சொன்னார்கள்.. இரு வீட்டாரும், இவர்களின் திருமணத்துக்கு சம்மதம் தந்தார்கள்.. அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை, காவேரிப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சரவணனுக்கும், ஸ்வேதாவுக்கும் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.
முதலிரவு: திருமணத்தை முடித்துக்கொண்டு, தம்பதி இருவரும் மறு வீட்டிற்காக திம்மாவரம் வந்திருக்கிறார்கள்.. இருவருக்கும், அன்றைய தினம் முதலிரவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.. பிறகு, தம்பதி 2 பேருமே முதலிரவு அறைக்கு சென்றார்கள்..
நள்ளிரவு கடந்ததுமே, தூங்கி கொண்டிருந்த ஸ்வேதா எழுந்து பார்த்தபோது, சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அலறி கூச்சலிட்டார். இந்த சத்தத்தை கேட்டு, வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் ஓடிவந்தனர்..
அப்போது சரவணன் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ந்தனர்.. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து, சரவணன் சடலத்தை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்கு பதிவு: பிறகு வழக்கு பதிவு செய்து விசாரணையையும் ஆரம்பித்தனர்.. சரவணன் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? உண்மையிலேயே தற்கொலைதான் செய்துகொண்டாரா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. எனவே, சரவணனின் மனைவி ராஜராஜேஸ்வரி, மாமனார் தாமோதரன், மாமியார் அலமேலு ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது.
முதலிரவுக்கு முன்பு, சரவணன் தன்னுடைய பெற்றோரிடம் எப்போதும் போலவேதான் பேசினாராம்.. மறுநாள் தன்னுடைய புதுமனைவியுடன் வெளியில் அழைத்து செல்லவும் திட்டமிட்டிருந்தாராம்.. அப்படியிருக்கும்போது, நைட் நேரத்தில் என்ன நடந்தது? என்று தெரியவில்லையே என்று கதறி அழுகிறார்கள்.. இந்த உயிரிழப்பு தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
விசாரணை: அதைவிட முக்கியமாக, முதலிரவு அறைக்குள் செல்லும் முன்பு சரவணன், தன்னுடைய பெற்றோரிடம் எப்போதும் போலவே பேசியிருக்கிறார்.. எந்தவித பதட்டமும், வருத்தமும், முகத்தில் தெரியவில்லை என்கிறார்கள்.. இதனால், அடுத்த விசாரணை ஸ்வேதாவிடம் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. ஆனால், விடிகாலையில் எழுந்து பார்த்தபோதே, சடலம் தூக்கில் தொங்கியதாக ஸ்வேதா கூறியுள்ளதால், மர்மம் இதில் நீடித்தபடியே உள்ளது. முதலிரவில், புதுமாப்பிள்ளை தூக்கில் தொங்கிய சம்பவம் பெருத்த அதிர்ச்சியை இரு குடும்பத்தினரிடமும் ஏற்படுத்தி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications