செங்கல்பட்டுக்கு நற்செய்தியா? மகாபலிபுரம் ரோட்டில் இப்படியொரு மேட்டரா? தமிழக அரசு சர்ப்ரைஸ் தருமா?
செங்கல்பட்டு: மாமல்லபுரத்துக்கு கடந்த சில வருடங்களாகவே குறைவான பஸ்கள் இயக்கப்பட்டு வரும்நிலையில், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது,
மாமல்லபுரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.. தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஏராளமான குடும்பத்தினர் மாமல்லபுரம் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள்.

சுற்றுலா பயணிகள்: எனவே, சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு செங்கல்பட்டு, தாம்பரம், திருவான்மியூர் பகுதிகளில் இருந்து மாமல்லபுரம் நகரத்து டவுன் பஸ்கள், மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.. ஆனால், இப்போது இந்த பஸ்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.. குறிப்பாக, செங்கல்பட்டில் இருந்து தடம் எண் 508 என்ற 2 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
தாம்பரம், மதுராந்தகம், காஞ்சிபுரம், உத்திரமேரூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோருக்கு இந்த 2 பஸ்கள் மட்டுமே ஒருவழியாக உள்ளது.. எனவே, இந்த 2 பஸ்களிலும் நெரிசலில்தான் மாமல்லபுரம் வரவேண்டியிருக்கிறது. இந்த 2 பஸ்களும் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவது இல்லை. அப்படியே வந்தாலும் 2 பஸ்களும் ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது.
மாமல்லபுரம்: அதேபோல், மாமல்லபுரத்திலிருந்து, செங்கல்பட்டுக்கு சென்று, அங்கிருந்து ரயில் மூலமே சென்னைக்கு பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டியிருக்கிறது.. போதிய அளவிலான பஸ்கள் இயக்கப்படாததால் வீடு திரும்பி செல்ல முடியாமல் நீண்ட நேரம் மாமல்லபுரம் பஸ் ஸ்டாண்டிலேயே காத்திருக்க வேண்டிய அவலம் நேர்ந்துவிடுகிறது.
எனவே, சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் மாமல்லபுரத்துக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
பஸ் நிறுத்தம்: பஸ் நிறுத்தங்களிலும் பெண்கள் நின்றிருந்தால் கண்டக்டரும், டிரைவரும் பஸ்ஸை நிறுத்துவதில்லை.. இதனால், பெண்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், நேரில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.. பஸ் நிறுத்தங்களில் பஸ்ஸை நிறுத்துவதுடன், கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு செங்கல்பட்டு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications