சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஷாக்கிங்.. மிரள வைக்கும் ஜெயமாலா.. என்ன நடக்கிறது தமிழகத்தில்.. தலைதூக்குகிறதா துப்பாக்கி கலாச்சாரம்

சென்னையில் 3 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மருமகளை போலீசார் தேடி வருகின்றனர்

Google Oneindia Tamil News

சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித்சந்த்.. 74 வயதாகிறது.. மனைவி பெயர் புஷ்பா பாய்.. அவருக்கு 70 வயதாகிறது.
இவருக்கு ஷீத்தல் என்ற மகன், பிங்கி என்ற மகள் உள்ளனர்.. மகன் ஷீத்தலுடன் ஒரு அப்பார்ட்மென்ட்டில் குடியிருந்து வந்தார். ஷீத்தல் கல்யாணமாகி மனைவியை பிரிந்தவர். மனைவி பெயர் ஜெயமாலா.. சில காலமாக கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு புனேவில் இருக்கிறார்.

சொத்துக்காக மாமனார், மாமியார், கணவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் இந்த பெண்.. அதிலும் மாமனாரை மட்டும் காது வழியாக சுட்டு கொலை செய்துள்ளார்.. மற்றவர்களின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.. நிறுத்தி நிதானமாக ஒவ்வொருவரையும் 5 முறை சுட்டிக்கிறார் ஜெயமாலா.

"தில்" ஜெயமாலா.. போலீசுக்கே தண்ணி காட்டி.. நடுரோட்டில் நடந்த "சேசிங்".. 3 பேர் பிடிபட்டது எப்படி?

 கமல், ஸ்டாலின்

கமல், ஸ்டாலின்

இந்த விவகாரத்தை கமல் முதல் ஸ்டாலின்வரை எல்லாருமே கண்டித்தனர்.. உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், இதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்றும், சந்தி சிரிக்கிறது என்றும் கமல் இடித்துரைந்திருந்தார்... இது ஒரு குடும்ப விவகாரம், சொத்து காரணமாகவே கொலைகள் நடந்திருந்தாலும், துப்பாக்கி என்ற விஷயம்தான், அரசியல் கட்சி தலைவர்கள் கொந்தளிக்க காரணமாக இருந்தது.

 பயங்கரம்

பயங்கரம்

பொதுவாக, வடமாநிலங்களில் மட்டுமே இப்படிப்பட்ட துப்பாக்கியால் சுட்டு கொலைகள் சர்வசாதாரணமாக இருக்கும்.. ஆனால் நம் மாநிலத்தில், அதுவும் தலைநகரிலேயே இப்படி ஒரு பயங்கரம் நடந்துள்ளதால்தான் சட்டம், ஒழுங்கு என்ற விஷயத்தையே எதிர்க்கட்சிகள் கிண்ட ஆரம்பித்துள்ளன.

சர்ச்சை

சர்ச்சை

இதற்கு முன்பு 2011-ல் ஆசிஷ்சர்மா என்பவர் யானைகவுனியில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதுதான் மிகப்பெரிய சர்ச்சையாக அப்போது வெடித்தது.. இதுவும் அவரது சொந்த வீட்டு பிரச்சனையால்தான் நடந்த கொலைதான்.. அதுபோல, 2016-ல் இதே சவுகார்பேட்டையில் டிராவல்ஸ் அதிபர் பாபுசிங் என்பவரையும் சுட்டுக் கொன்றவர்.. இந்தக் கொலை வழக்கில் ராகேஷ் என்பவரை 25 நாட்கள் கழித்து போலீஸார் கைது செய்தனர்... இப்படி நடந்த 2 துப்பாக்கி கொலைகள்தவிர, பெரிதாக எந்த சம்பவமும் நடந்து வராத நிலையில்தான், சவுகார்பேட்டையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.. இதை ஒரு இளம்பெண்ணே செய்தது அதைவிட ஷாக்!

 ஹைகோர்ட்

ஹைகோர்ட்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு துப்பாக்கியை காட்டி தமிழகத்தில் கொள்ளைகள் நடந்த வந்த சமயம், ஹைகோர்ட் இந்த விஷயத்தை கண்டித்திருந்தது.. "தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது, பீஹார் போல மாறி வருகிறது.. துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நடவடிக்கைக் குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.. உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி எங்கிருந்து கொள்ளையர்களுக்கு கிடைத்தது" என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பியிருந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது..

சப்ளை

சப்ளை

பீஹார், ஜார்கண்ட், சத்தீஸ்கரில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் தமிழகத்தில் ரவுடிகள், குண்டர்கள், அரசியல்வாதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது என்று ஒரு பேச்சு எழுந்தபோதே, நாம் சுதாரிக்க தவறிவிட்டோமோ என்ற சந்தேகமும் எழுகிறது.. நம் தமிழகத்தை பொறுத்தரை, நடக்கும் கொலைகளின் பிரதான ஆயுதங்கள் அரிவாளும், கத்தியும்தான்.

 செக்போஸ்ட்

செக்போஸ்ட்

அப்படி இருக்கும்போது, துப்பாக்கியை வெளிமாநிலத்தில் இருந்து கொண்டு இவர்கள் வந்திருக்கிறார்கள் என்றால், சோதனைகள் செக்போஸ்ட்களில் சரியாக நடத்தப்படுவதில்லையா? வெளிமாநில ஆட்கள் கையில் என்ன கொண்டு வருகிறார்கள், கொண்டு செல்கிறார்கள் என்பதில் சோதனை குறைவாக உள்ளதா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

 துப்பாக்கி கலாச்சாரம்

துப்பாக்கி கலாச்சாரம்

இப்படிப்பட்ட யூகங்களும், சந்தேகங்களும் நிலவுவதே, நம் மாநிலத்துக்கு நல்லது கிடையாது.. இந்த அபாயத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது நமக்கு இன்றியமையாத ஒன்றாகும்.. இல்லாவிட்டால், வடமாநிலங்களில் கிளர்ந்தெழுந்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை இனிவரும் காலங்களில் கட்டுப்படுத்த முடியாத அபாயமும் நமக்கு ஏற்பட்டு விடலாம்.. !

English summary
Chennai 3 people shot dead issue, and Is Gun culture on the rise in Tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X