'சார் அம்மா சீரியஸா இருக்காங்க'.. ஓடி வந்த மகாலட்சுமி.. அலறிய அடகுக்கடைக்காரர்! கடைசியில் ட்விஸ்ட்
சென்னை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் அடகுக்கடை வைத்திருக்கும் சுரேந்திர குமார் என்பவரை ஏமாற்றி கவரிங் நகையை அடகு வைத்து இளம் பெண் ஒருவர் மோசடி செய்துள்ளார்.
சென்னை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் அடகுக்கடை வைத்திருக்கும் சுரேந்திர குமார் என்பவரை ஏமாற்றி கவரிங் நகையை அடகு வைத்து இளம் பெண் ஒருவர் மோசடி செய்துள்ளார். இதையடுத்து அவரை புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று பதற்றத்துடன் வந்து அவசர அவசரமாக அடகு வைத்தால் சற்று தடுமாறிய சுரேந்திர குமார், அந்த பெண்ணிடம் ஏமாந்து விட்டாராம். வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்க்கு பிறகே உண்மை அவருக்கு தெரிந்திருக்கிறதாம்.
சென்னை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் அடகு கடை வைத்திருப்பவர் சுரேந்தர் குமார் (52). இவரது அடகுக்கடைக்கு கடந்த 24-ம் தேதி இளம்பெண் ஒருவர் வந்தார். அவசரமாக பணம் தேவைப்படுகிறது. அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை. அவசரம் ப்ளீஸ் என்று கெஞ்சியபடி, நகைகளை கொடுத்து அடகு வைக்க கேட்டிருக்கிறார்.
உடனே சுரேந்தர் குமார், உங்ககிட்ட ஆதார் கார்டு அல்லது ஏதாவது ஒரிஜினல் ஐடி இருந்தா கொடுங்க என்று அந்த பெண்ணிடம் கேட்டிருக்கிறார். அப்போது அந்தப் பெண், சார், என் அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. சீரியஸாக இருக்கிறார்கள். அதனால்தான் எந்த ஆவணங்களையும் கையோடு எடுத்துட்டுவரவில்லை. நாளைக்கு வந்து ஆவணங்களை தருகிறேன். அவசரமாகப் பணம் கொடுங்கள்' என்று கெஞ்சி இருக்கிறார்.

உதவி செய்தார்
இதை உண்மை என்று நம்பிய சுரேந்தர் குமார், உடனே அந்த பெண்ணுக்கு நகைகளை சரியாக பரிசோதிக்காமல் 22,000 ரூபாயை கொடுத்திருக்கிறாராம். அதை வாங்கிக் கொண்ட அந்தப் பெண், இந்த உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன்' என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துவிட்டு சென்றுவிட்டாராம். அதன்பிறகு நகைகளை வாங்கி லாக்கரில் வைத்துவிட்டு வழக்கமான வேலைகளை தொடந்திருக்கிறார்.

சிசிடிவி கேமரா
இந்நிலையில் கடந்த 27-ம் தேதி பான் புரோக்கர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் கவரிங் நகைகளைக் கொடுத்து பெரம்பூரில் ஒரு பெண் ஏமாற்றியதாக, அவரது கடைக்கு வந்த பெண்ணின் புகைப்படம் வந்திருக்கிறது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேந்தர் குமார், கடைக்குள் சென்று தன்னுடைய சிசிடிவி கேமராவை ஆய்வு செய்திருக்கிறார். அப்போது தான் தன்னிடம் தங்க நகைகளை அம்மாவுக்கு உடம்புக்கு முடியல, அவசரம் எனறு கூறி அடகு வைத்த பெண்தான் அது என்பது புரிந்திருக்கிறது.

அதிரடி கைது
உடனே சுரேந்தர் குமார், அந்த பெண் அடகு வைத்த நகைகளை சோதித்துப் பார்த்திருக்கிறார். அப்போது அவை கவரிங் என்பது உறுதியானது. இதையடுத்து அடகு கடை உரிமையாளர் சுரேந்தர் குமார், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் சுரேந்தர் குமார் புகார் கொடுத்தார். அந்த பெண்ணின் சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசாரிடம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அடகுக்கடையில் ஏமாற்றிய பெண் சென்னை கீழ்ப்பாக்கம், கெல்லீஸ், ஏ.கே நகரைச் சேர்ந்த மகாலட்சுமி (33) என்பதை கண்டுபிடித்தனர்.

விசாரணையில் தகவல்
அரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீஸார், மகாலட்சுமியை பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாலட்சுமி என்ற பெண் சுரேந்தர் குமாரிடம் கடந்த 24-ம் தேதி 7 கிராம் எடையுள்ள கவரிங் நகைகளைக் கொடுத்து 22,000 ரூபாயை ஏமாற்றியதையும். அதன்பிறகு செம்பியம் பகுதியில் சுமார் 10 கிராம் எடையுள்ள கவரிங் நகைகளைக் கொடுத்து 20,000 ரூபாயை ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த இரண்டு அடகு கடைக்காரர்களிடம் 42,000 ரூபாயை ஏமாற்றிய மகாலட்சுமி அதை செலவு செய்துவிட்டதும் ஆடம்பரமாக வாழ இதுபோன்ற மோசடிகளை மகாலட்சுமி அரங்கேற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அய்யோ பாவம் என்று இரக்கப்பட்ட அடகுக்கடைக்காரை ஏமாற்றிய மகாலட்சுமி இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications