அதுக்குள்ளயா.. ஒரு வாரம் தானே ஆச்சு! சென்னை ஏசி மின்சார ரயில் சேவை திடீர் ரத்து! வெளியான காரணம்!
சென்னை: பயணிகளின் பெறும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் சேவை கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 3.45 மணி ஏசி மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயில் சேவையை பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு குறைந்த செலவில் வேகமாக சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக வேலை, கல்லூரிக்கு செல்லும் மக்கள் மின்சார ரயில்களால் அதிகம் பயனடைந்து வருகின்றனர். 5 ரூபாய் கட்டணத்தில் சென்னையில் 55 மின்சார ரயில்களின் சேவைகள் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் வழித் தடத்திலும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்துமே ஏசி வசதி இல்லாத ரயில் பெட்டிகள் ஆகும். இந்த நிலையில் சென்னை மக்களின் வசதிக்கேற்ப ஏசி வசதியுடன் கூடிய மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை அடுத்து சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் புறநகர் ஏசி மின்சார ரயில் தயாரிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து சோதனை உள்ளிட்ட பணிகள் நடைபெற்ற நிலையில் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி முதல் சென்னையில் முதன் முறையாக ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கியது. 12 பெட்டிகள் கொண்ட ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏசி மின்சார ரயில் அமர்ந்தபடி 1116 பேரும் நின்று கொண்டு 3798 பேர் என மொத்தம் 4914 பேர் பயணிக்க முடியும்.
பிரதமர் மோடி கடந்த 6-ம் தேதியே தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு பிறகு 13 நாள் தாமதமாக பத்தொன்பதாம் தேதி முதல் ஏசி மின்சார ரயில் இயக்கப்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7:00 மணி, பிற்பகல் 3.45, இரவு 7.35 ஆகிய நேரங்களில் புறப்படும் நேரத்தில் தாம்பரத்திற்கு காலை 7.42, மாலை 4.26, இரவு 8.30 மணிக்கு செல்கிறது. அங்கிருந்து இரண்டு சேவை மட்டுமே செங்கல்பட்டுக்கு இயக்கப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து காலை 9 மணி, மாலை 5:45 மணிக்கு புறப்படும் ரயில் தாம்பரத்தில் இருந்து 10:30, இரவு 7.15 மணிக்கு புறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ரயில் இயக்கப்படும் நேரம் முறையாக இல்லை எனவும் கட்டணமும் மிக அதிகமாக இருக்கிறது என ரயில் பயணிகள் கூறியிருந்தனர். இந்நிலையில் இன்று மதியம் ஏசி மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மதியம் 3.45 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் ஏசி மின்சார ரயில், மறு மார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து 5.45 மணிக்கு கடற்கரை செல்லும் ஏசி மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications