சென்னையில் வலியால் துடித்த கர்ப்பிணி.. டிராபிக்கால் ஸ்ட்ரெச்சருடன் தூக்கி ஓடிய இளைஞர்கள்.. சபாஷ்
சென்னை: சென்னை மெரினாவில் இன்று மிகப்பிரமாண்டமாக விமான வான் சாகச நிகழ்ச்சி நடந்தது. இதனை பார்க்க ஏராளமானவர்கள் குவிந்ததால் சென்னையில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸில் கர்ப்பிணி பெண் வலியால் துடித்தார். இதை கவனித்த இளைஞர்கள் சற்றும் யோசிக்காமல் கர்ப்பிணி படுத்திருந்த ஸ்ட்ரெச்சரை சுமந்து தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய விமானப்படை தொடங்கி 92 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தற்போது விமானப்படை 93வது ஆண்டில் அடியெடுத்து வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் இன்று பிரமாண்டமாக இந்திய விமானப்படை சார்பில் விமான வான் சாகச நிகழ்ச்சி நடந்தது.

இந்திய விமானப்படையில் உள்ள ஹெலிகாப்டர்கள், ரபேல் உள்பட பல்வேறு போர் விமானங்கள் வானில் மின்னல் வேகத்தில் பறந்து சாகசம் நிகழ்த்தின. மொத்தம் 72 விமானங்கள் சாகசங்கள் நிகழ்த்தின. வானில் வண்ண புகைகளை கக்கியபடி பறந்தன. இந்த விமான சாகச நிகழ்ச்சியை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர்.
உண்மையில் எதிர்பார்த்ததை விட லட்சக்கணக்கான மக்கள் விமான சாகச நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசித்தனர். இதனால் ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அலைமோதியது. மெரினா முழுவதும் மக்களின் தலையாகவே தெரிந்தது. தொடர்ந்து ஏராளமானவர்கள் மெரினா நோக்கி கார்களில் புறப்பட்டனர். இதனால் சென்னையில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை அண்ணா சாலை, வாலாஜா சாலை, அடையாறு மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் செல்ல முடியாமல் திக்கு முக்காடின. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
மக்கள் வெள்ளத்தில் மெரினா! விமான சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்! 20 பேருக்கு மயக்கம்
அதாவது திருவல்லிக்கேணி பாரதி சாலை முழுவதும் விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் நடந்து செல்கின்றனர். கடும் கூட்ட நெரிசலால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் சிக்கி செல்ல முடியாமல் தவிக்கின்றன. இந்த வேளையில் கர்ப்பிணியை ஏற்றி சென்ற ஆம்புலன்சும் டிராபிக்கில் சிக்கியது. ஆம்புலன்ஸால் நகர முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே அதில் இருந்த கர்ப்பிணி வலியால் துடித்தார். இதையடுத்து இளைஞர்கள் ஆம்புலன்ஸில் இருந்து கர்ப்பிணியை ஸ்ட்ரெச்சர் மூலம் கீழே இறக்கினர். அதன்பிறகு கர்ப்பிணி படுத்திருந்த ஸ்ட்ரெச்சரை அவர்கள் தூக்கி சுமந்து அருகே உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த இளைஞர்களுக்கு போலீசார் உதவி செய்தனர். மேலும் கர்ப்பிணியை ஸ்ட்ரெச்சரில் சுமந்து செல்பவர்களுக்கு முன்பு ஓடி வழிவிடும்படி மக்களிடம் கேட்கின்றனர். இந்த கூட்டு முயற்சியால் உரிய நேரத்தில் கர்ப்பிணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னையே திணறுது.. மொத்த ஊரும் மெரினாவை நோக்கி படையெடுப்பு.. கடும் போக்குவரத்து நெரிசலில் அவதி!
கூட்ட நெரிசலுக்கு நடுவே இளைஞர்கள் யோசிக்காமல் கர்ப்பிணிக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கர்ப்பிணியை ஸ்ட்ரெச்சரில் வைத்து இளைஞர்கள் தூக்கி செல்லும் வீடியோ தற்போது வெளியாகி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்க்கும் பலரும் கர்ப்பிணிக்கு உதவிய இளைஞர்களை பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications