சென்னையில் ஒரே ஆச்சரியம்.. ஒரே நாளில்.. ஒரே இடத்தில்.. மிரண்டு போன அதிகாரிகள்.. யாரந்த பெண்?
சென்னை: ஒரே நாளில் சென்னை ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம் மிகுந்த ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் ஏர்போர்ட்களில் தங்கம் கடத்தல் நடக்காத வண்ணம் அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து அவற்றை தடுத்து வருகிறார்கள். அதில் பிடிபடுபவர்களையும் பிடித்து கைது செய்து உள்ளே வைக்கிறார்கள். அப்படியும் ஒருசிலர் டிமிக்கி கொடுத்து தங்கத்தை கடத்தவும் செய்கிறார்கள்..

இது தமிழகம் முழுவதுமுள்ள ஏர்போர்ட்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.. கூடுதல் விழிப்புணர்வுடன் அதிகாரிகள் அங்கு கண்காணித்து வரும்நிலையில், நேற்றுகூட சிலர் சென்னை ஏர்போர்ட்டில் பிடிபட்டுள்ளார் ஒரு பெண்மணி.
விமான நிலையம்: சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் சட்டவிரோதமாக பொருட்களைக் கொண்டு வருகின்றனரா? என்று நேற்றுகூட சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, ஏர் இந்தியா விமானம் துபாயில் இருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தது.. ஆனால், அந்த விமானம் உடனே டெல்லிக்கு செல்ல வேண்டி இருந்தது.. எனவே, பணியாளர்கள் அந்த விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள்..
அப்போது, விமானத்தில் சீட் ஒன்றின்கீழ் பார்சல் ஒன்று விழுந்து கிடந்ததை பணியாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.. அதாவது, அந்த விமானத்தின் இருக்கை ஒன்று தூக்கியபடி இருந்ததாம்.. அதை சரி செய்ய முயன்றபோதுதான், இந்த சீட்டுக்கு கீழே பார்சல் இருந்திருக்கிறது.. பின்னர் இது தொடர்பாக, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர்..
தங்க பசை: சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைகளை மேற்கொண்டனர்.. அப்போதுதான், அந்த பார்சலில் பசை வடிவத்தில் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. இதை ஆய்வு செய்தபோது, 1.25 கிலோ தங்கப்பசை இருந்ததும் தெரியவந்தது.
இதன் மொத்த மதிப்பு 73 லட்சம் ரூபாய் என்கிறார்கள்.. இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, உடனடியாக விசாரணையை துவக்கியுள்ளனர்.. அத்துடன், துபாயில் இருந்து விமானத்தில் தங்கப்பசை கடத்தி வந்தது யார்? என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அதுபோலவே, அன்றைய தினமும் இன்னொரு கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது.. சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் சென்னை வந்திறங்கியது.. அந்த விமானத்தில் வந்தவர்களை, வழக்கம்போல் அதிகாரிகள் சோதனை செய்தனர்..
விமான பயணிகள்: அந்தவகையில், சிங்கப்பூருக்கு சுற்றுலாப் பயணியாக சென்று வந்த சென்னையை சேர்ந்த 45 வயது பெண் ஒருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் 5 தங்க செயின்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த தங்கத்தின் எடை 473 கிராம் ஆகும்.. அதாவது, 26.27 லட்சம் ரூபாய் இருக்குமாம்.
அந்த பெண் யார் என்று தெரியவில்லை.. இதையடுத்து அந்த பெண் பயணியை கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்... இவருடன் மேலும் 2 பேருக்கு இந்த கடத்தலில் தொடர்பு உள்ளதும் தெரியவந்துள்ளது.. ஒரே நாளில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 1.73 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, விமான பயணிகள் இடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications