இனி குறைந்த விலையில் ஏர்போர்ட்டில் ஜம்முனு சாப்பிடலாம்! ரூ.10 போதும்.. கலக்கும் சென்னை விமான நிலையம்
சென்னை: பொதுவாகவே ஏர்போர்ட்களில் உணவுகளின் விலை உச்சத்தில் இருக்கும். இதனாலேயே விமான நிலையம் செல்வோர் தண்ணீர் வாங்கிக் குடிக்கக் கூட யோசிப்பார்கள். இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் குறைந்த விலையில் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் டீ ரூ.10க்கும் காபி ரூ.20க்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
நமது நாட்டில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெளிநாட்டிற்கு மட்டுமின்றி உள்நாட்டு விமானச் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

உணவு விலை:
பொதுவாக அனைத்து விமான நிலையங்களும் ஒரு சிக்கல் இருக்கும். அதாவது குறைந்த விலையில் எந்தவொரு உணவும் கிடைக்காது. விமான டிக்கெட் கூட எடுத்துவிடலாம் போல.. ஆனால், அங்கு விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலையைப் பார்த்தால் நமக்குத் தலையே சுற்றிவிடும். சென்னை விமான நிலையத்திலும் இதே பிரச்சினை இருந்தது. பலரும் இது தொடர்பாகக் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இதற்கிடையே விமான நிலையத்தில் மிகக் குறைந்த விலையில் உணவை வழங்கச் சென்னை விமான நிலையத்தில் உதான் யாத்ரி கஃபே தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில் தரமான உணவுகள் பயணிகளுக்குக் கிடைப்பது உறுதி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகக் குறைந்த விலை
இந்த உணவகத்தில் தண்ணீர் பட்டில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். மேலும், டீ- 10 ரூபாய், காபி -20 ரூபாய், சமோசா- 20 ரூபாய், இனிப்புகள்- 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் பயணிகள் பலன் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கோரிக்கை
அடிக்கடி விமானங்களில் பயணிப்போராக இருந்தாலும் சரி, எப்போதாவது விமானத்தில் பயணிப்போராக இருந்தாலும் சரி, அவர்கள் எதிர்கொள்ளும் மேஜர் பிரச்சினையாக ஏர்போர்ட் உணவு ரேட் இருக்கும். பலரும் இது குறித்துப் புலம்பிக் கேட்டிருப்போம். மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்தே மத்திய அரசு உதான் யாத்ரி கஃபேயை அறிமுகம் செய்தது. நாட்டின் முதல் உதான் யாத்ரி கஃபே கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் கடந்தாண்டு டிசம்பர் 19ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. விமானத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக இது அறிமுகப்படுத்தப்பட்டது.
விரிவாக்கம்
கொல்கத்தா விமான நிலையத்தில் உதான் யாத்ரி கஃபேவுக்கு மிக சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இந்த கஃபேவை இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்ற விமான நிலையங்களுக்கும் கொண்டு வர சிவில் விமானத் துறை அமைச்சகம் முடிவு செய்தது. அதன் அடிப்படையிலேயே இப்போது சென்னை விமான நிலையத்தில் இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் டெல்லியிலும் இதேபோன்ற உணவகத்தைத் திறக்க மத்திய விமானத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
அதேநேரம் இப்போது பெரும்பாலான விமான நிலையங்கள் தனியார் வசம் இருக்கும் நிலையில், அங்கும் இதுபோல குறைந்த விலையில் உணவுகள் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
-
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications