"இன்னும் நாலு நாள் தான் இருக்கே.." சென்னை ஏர்போர்ட்டில் வரும் வாவ் மாற்றம்.. இனி பிரச்சினையே இல்லை
சென்னை: சென்னை ஏற்போர்ட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இன்னும் நான்கே நாட்களில் அங்கே ஒரு முக்கிய மாற்றம் வர இருக்கிறது.
இந்தியாவில் உள்ள முக்கியமான ஏர்போர்ட்களில் ஒன்றாகச் சென்னை ஏர்போர்ட் இருக்கிறது. முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் அதிகம் பயன்படுத்தும் ஏர்போர்ட்களில் ஒன்றாகச் சென்னை ஏர்போர்ட் இருக்கிறது.

இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் சென்னை ஏர்போர்ட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை ஏர்போர்ட்டிலும் பல முக்கிய மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது
சென்னை ஏர்போர்ட்: இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் கலக்கலான ஒரு மாற்றம் வர இருக்கிறது. அப்போது முதல் டெர்மினல் 4 உள்நாட்டு விமானங்களை இயக்க தொடங்கும். இதன் மூலம் உள்நாட்டுப் பயணிகள் சற்று ரிலாக்ஸாக சென்னை ஏர்போர்ட்டில் பயணிக்கலாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சர்வதேச விமானங்கள் இந்த டெர்மினல் 4இல் இருந்து தான் இயக்கப்பட்டது.
புதிய ஒருங்கிணைந்த முனையம் திறக்கப்பட்ட பிறகு இந்த டெர்னினல் 4 மூடப்பட்டுப் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது அந்தப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், டெர்னினல் 4 திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாகச் சோதனை அடிப்படையில் ஏர் இந்தியா நவம்பர் 14ஆம் தேதி முதல் இங்கே உள்நாட்டு விமானங்களை இயக்க உள்ளது. தொடர்ந்து மறுநாள், அதாவது நவ. 15ஆம் தேதி முதல் வழக்கமான உள்நாட்டுச் செயல்பாடுகள் தொடங்கும் என்று சென்னை ஏர்போர்ட் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பிளான் என்ன: ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் நிறுவனங்கள் இந்த டெர்மினல் 4இல் இருந்து உள்நாட்டு விமானங்களை இயக்கும். நவம்பர் 15 முதல் ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் இந்த டெர்மினல் 4இல் இருந்து இயக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். சர்வதேச விமான செயல்பாடுகள் இப்போது புதிய ஒருங்கிணைந்த வளாகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், பழைய சர்வதேச முனையம் உள்நாட்டு முனையமாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச முனையமாக இருந்த போது இந்த டெர்மினல் 4இல் சுங்க மற்றும் இம்மிகிரேஷன் கவுண்டர்கள் இருந்த நிலையில், அவை இப்போது அகற்றப்பட்டு அங்கே கன்வேயர் பெல்ட்கள் பொருத்தப்பட்டன. கடந்த ஜூலை மாதம் முதல் ஒருங்கிணைந்த ஏர்போர்ட்டில் விமான செயல்பாடுகள் தொடங்கிய நிலையில், நான்கு மாதத்தில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
எந்த நிறுவனங்கள்: இப்போது புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் இயங்குகிறது. இந்த டெர்மினல் 4இல் இருந்து ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் மட்டும் உள்நாட்டு விமானங்களை இயக்குவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022இல் செப்டம்பர் மாதம் 10.85 லட்சம் உள்நாட்டுப் பயணிகளைச் சென்னை ஏர்போர்ட் கையாண்ட நிலையில், இந்தாண்டு அந்த எண்ணிக்கை 12.36 லட்சமாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 13.8 சதவீதம் அதிகமாகும்.
அதேபோல கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் 2023 வரை, சென்னை விமான நிலையம் 76.05 லட்சம் உள்நாட்டுப் பயணிகளைக் கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் பயணித்த 63.92 லட்சம் பயணிகளைக் காட்டிலும் 19 சதவீத அதிகமாகும்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications