சென்னைக்கு புது ஆபத்து! 1500 காகங்கள் பலி: உயிருக்கே உலை வைக்கும் ஆஃப் பாயில்? தமிழக அரசு சொல்வதென்ன
சென்னை: கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியில் காகங்கள் அதிக அளவில் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தமிழக எல்லைப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், பறவைக் காய்ச்சல் அதாவது H5N1 இருப்பது கண்டறியப்பட்டது.

சென்னை காகங்கள்
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக 1,500-க்கும் மேற்பட்ட காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்தன.. இதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது... இது மனிதர்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதால், மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சகம் தமிழக தலைமைச் செயலாளருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்தக் கடிதத்தில், பறவைக் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காகங்கள் இறந்து கிடந்த அடையாறு, பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்து தூய்மை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், இறந்த பறவைகளை வெறும் கையால் தொடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொத்து கொத்தாக உயிரிழப்பு
மேலும், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும், கோழிப் பண்ணைகளில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. காகங்கள் அல்லது இதர பறவைகள் கொத்துக் கொத்தாக உயிரிழப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பதோடு, இறந்த பறவைகளை குறைந்தது 8 முதல் 10 அடி ஆழத்தில் குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்றும் அந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாக வேகவைத்து உண்ணுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆஃப் பாயில் உயிருக்கே உலை
குறிப்பாக "ஆஃப் பாயில்" மற்றும் பச்சையாக முட்டைகளை சேர்த்து செய்யப்படும் உணவு வகைகளை தற்போது முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. சரியாக சமைக்கப்படாத இறைச்சி மூலம் வைரஸ் மனித உடலுக்குள் நுழைய வாய்ப்புள்ளதால், உணவகங்கள் மற்றும் வீடுகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்..
தமிழகத்தை பொறுத்தவரை, ஓசூர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
தமிழக சுகாதாரத்துறை
பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், இறைச்சியைக் கையாளும்போது சுகாதாரமான முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதார வல்லுநர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், காகங்கள் அல்லது பறவைகள் ஏதேனும் மர்மமான முறையில் இறந்து கிடந்தால், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறவை இறைச்சி கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் பறவைகளை நேரடியாக கையாளுபவர்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அறிகுறிகள் - அலர்ட்
தங்கள் பகுதிகளில் காக்கை, புறா உள்ளிட்ட ஏதேனும் பறவைகள் கூட்டமாகவோ அல்லது அசாதாரணமான முறையிலோ இறந்து கிடப்பதை கண்டால், உடனடியாக கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு இந்த தொற்று பரவும் பட்சத்தில் கடுமையான காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்படும். இத்தகைய பாதிப்புகள் இருப்பவர்கள் அலட்சியமாக இருக்காமல், உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென சிறப்பு வார்டுகள் மற்றும் மருந்துகளை தயார் நிலையில் வைக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications