சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: சென்னையில் 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இதனால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. அது போல் காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் மழை பெய்து வருகிறது.
நேற்று முன் தினம் சென்னையில் திநகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்தது. அது போல் அண்ணா சாலையில் லேசான மழை பெய்தது. திருவல்லிக்கேணி, சூளைமேடு, வடபழனி, எம்எம்டிஏ காலனி, அசோக்நகர், கே கே நகர், வில்லிவாக்கம், அண்ணாநகர், அயனாவரம், பசுமை வழி சாலை பகுதிகளிலும் மழை பெய்தது.

சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், அண்ணாநகர் பகுதிகளில் மழை பெய்தது. முகப்பேர், நொளம்பூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்தது. நேற்றைய தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது.

வெயில் தாக்கம்
இந்த நிலையில் இன்றைய தினமும் காலை முதலே வெயில் இல்லாமல் இருந்தது. இதையடுத்து மாலை 3 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கிண்டி, திநகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, விரும்கபாக்கம், சாலிகிராமம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாநகர், முகப்பேர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

புறநகர் பகுதிகள்
அது போல் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, மாங்காடு, செங்குன்றம், பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கிறது. சென்னையில் ஆங்காங்கோ மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் பகுதிகளில் மழையால் சேரும் சகதியுமாக சாலை இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியுறுகிறார்கள்.

2 மணி நேரத்திற்கு கனமழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரு மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும். அது போல் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் லேசான மழையே இருக்கும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது கனமழை பெய்யும் என்ற அறிவிப்பையொட்டி பலர் அலுவலகங்களில் இருந்து விரைந்து வீடு திரும்ப கிளம்பி வருகிறார்கள்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications