சென்னை அண்ணா நகர் மசாஜ் அழகி.. தொழில் அதிபருக்கு இன்ப விருந்து அழைப்பு.. இறுதியில் ட்விஸ்ட்
சென்னை: சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த சார்லஸ் என்ற தொழிலதிபர், தேக்குமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சென்னை அண்ணா நகரில் உள்ள மசாஜ் கிளப்பிற்கு அடிக்கடி சென்று வருவாராம். இந்நிலையில் அங்கு பழகிய ஆண்ட்ரியா என்ற ஆங்கிலோ-இந்திய பெண், சூளைமேட்டில் விருந்து இருப்பதாக சிக்க வைத்து, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தாராம். இந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணம் வைத்துள்ளவர்களை குறிவைத்து பணம் பறிக்க உல்லாசத்தை ஆயுதமாக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. உல்லாசத்துக்கு அழைக்கும் பெண்களை நம்பி, சபலப்படும் ஆண்கள், பணம், நகைகளை பறிகொடுப்பது அதிகரித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் ஒரு தொழிலதிபர் ஏமாந்துள்ளார்.

அடிக்கடி பழக்கம்
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த 50 வயதாகும் சார்லஸ் என்பவர் தொழில் அதிபர் ஆவார். இவர் தேக்குமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சென்னை அண்ணா நகரில் உள்ள மசாஜ் கிளப்பிற்கு சென்று மசாஜ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த கிளப்பில் மசாஜ் செய்யும் ஊழியராக பணியாற்றிய ஆண்ட்ரியா என்ற ஆங்கிலோ-இந்திய பெண்ணுடன் சார்லஸ்க்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தார்களாம்.
மசாஜ் ஆசை
அந்தவகையில் கடந்த மே மாதம் 29-ந்தேதி அன்று ஆண்ட்ரியா, தொழிலதிபர் சார்லசுடன் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. தனக்கு தெரிந்தவரான ரேகா சாவித்திரி (60) சூளைமேட்டில் சொகுசு விடுதி நடத்தி வருகிறார் என்றும், அங்கு வந்தால் மசாஜ் செய்து கொள்வதோடு உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினாராம். இதனால் ஆசையுடன் சென்ற சார்லசுக்கு ஆப்பு காத்திருந்தது. உண்மை என்று நம்பி சூளைமேட்டில் உள்ள குறிப்பிட்ட சொகுசு விடுதிக்கு சார்லஸ் சென்றுள்ளார்.
போலீஸ் போல் வந்த இளைஞர்கள்
அங்கே ரேகா சாவித்திரி என்ற பெண்ணும் இரண்டு இளைஞர்கள் இருந்தார்களாம். விடுதிக்குள் சென்ற உடனேயே அங்கிருந்த ஆண்கள் இருவரும் தங்களை காவலர்கள் என்று அறிமுகம் செய்துகொண்டு, சார்லசை சரமாரியாக தாக்கினார்களாம். இந்த வயதில், உனக்கு ஜாலியாக இருக்கணுமா என்று சார்லசை கடுமையாக தாக்கினார்களாம். தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் சார்லஸ் சுருண்டு விழுந்தாராம். இதை பயன்படுத்திகொண்டு சார்லஸ் அணிந்திருந்த 20 பவுன் தங்க சங்கிலி, கை சங்கிலி ஆகியவற்றையும் விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஆகியவற்றையும் போலீஸ் என்று கூறிய அந்த இளைஞர்கள் இருவரும் சேர்ந்து பறித்தனர்.
பணம் பறிப்பு
மேலும் கூகுள் பே மூலம் சார்லசின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தையும் அபகரித்தார்களாம். பின்னர் சார்லசை அங்கிருந்து விரட்டினார்களாம். உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு போய், நகை, பணம் மற்றும் கைக்கடிகாரத்தை பறிகொடுத்த சார்லஸ் முதலில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றாராம். அதனை தொடர்ந்து மசாஜ் சென்டரில் தனக்கு நேர்ந்த சம்பம் குறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் சார்லஸ் புகார் அளித்தார். சூளைமேடு போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சொகுசு விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
ஆண்ட்ரியா மூளை
ஆனால் அந்த விடுதியில் யாரும் இல்லை. மசாஜ் அழகி ஆண்ட்ரியாவும் அவரது கணவர் கோகுல கிருஷ்ணனும்தான் சார்லஸ் தாக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதை கண்டுபிடித்தனர். அவர்கள் இருவரும் தலைமறைவாகி இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். அதேநேரம் மசாஜ் மோசடி செய்த ரேகா சாவித்திரியும், போலீஸ்காரராக நடித்த நவீன்குமார் (23) என்ற இளைஞரும் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பதுங்கி இருப்பதை விசாரணையில் போலீசார் கண்டுபிடித்தனர்.. அவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் செங்கோட்டை சென்று கைதுசெய்து, சென்னை அழைத்து வந்தனர்.
ரேகா சாவித்திரி கைது
ரேகா சாவித்திரி போலியான மசாஜ் கிளப் நடத்தி, சபலத்தில் வரும் ஆண்களிடம் பணம் நகைகளை பறிப்பதை தொழிலாக செய்து வந்தவர் என்பதும், அவர் மீது வடபழனி காவல் நிலையத்தில் 2 வழக்குகள் இருப்பதையும் சூளைமேடு போலீசார் கண்டுபிடித்தனர். ரேகா சாவித்திரியும் நவீன்குமாரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான ஆண்ட்ரியாவையும், இன்னொரு போலீசாக நடித்த அவரது கணவர் கோகுல கிருஷ்ணனையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications