Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங்..கிட்ட நெருங்கி வந்த "ஜொமேட்டோ" ஊழியர்கள்..கடைசி நிமிடம் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைதான 8 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.. இதையடுத்து சென்னையில் பரபரப்பும் அதிர்ச்சியும் நிலவி வருகிறது. இந்தசம்பவம் சென்னையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். 52 வயதாகிறது.. இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். நேற்று ஆம்ஸ்ட்ராங் வீட்டில் இருந்தபோது, பைக்கில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு வந்துள்ளது..

armstrong Chennai

ஆம்ஸ்ட்ராங் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூர தாக்குதலையும் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ராங்கை., அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக காவல் துறைக்கு தகவல் தந்துள்ளனர்.

பரிதாபம்: சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.. அடுத்த சில மணி நேரங்களிலேயே, சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செம்பியம்: அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் நேற்று முதலே ஈடுபட்டு வருகிறார்கள்.. சென்னையில், அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கிற்கு பொற்கொடி என்ற மனைவியும், சாவித்திரி என்ற இரண்டரை வயது பெண் குழந்தையும் உள்ளனர்.. இவர், நேற்றிரவு 7.15 மணியளவில் தன்னுடைய வீட்டின் வெளியே அண்ணன் வீரமணி (65), பாலாஜி (53) ஆகியோருடன் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தாராம் ஆம்ஸ்ட்ராங்..

அலர்ட்: அப்போது தனியார் உணவு டெலிவரி கம்பெனியில் வேலை செய்யும் ஊழியர்கள் போல, அதே யூனிபார்மில், 4 பேர் கொண்ட கும்பல் திடீரென ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி வந்தது. வழக்கமாக உஷாராக இருப்பாராம் ஆம்ஸ்ட்ராங்.. ஆனால், நேற்றைய தினம் மட்டும் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் என்று நிஜமாகவே நினைத்து அசால்டாக நின்று பேசிக் கொண்டிருந்தாராம். ஜொமேட்டோ ஊழியர்களை போல அவர்கள் வந்திருக்கிறார்கள். அப்போதுதான், இந்த வெறிச்செயலில் அக்கும்பல் ஈடுபட்டது தெரிய வந்தது.

மொத்தம் 10 பேர் வந்திருக்கிறார்கள்.. இதில் 4 பேர் அந்த பகுதியை கண்காணித்தபடியே இருக்க, 6 பேர் வெட்டி சாய்த்ததாக சொல்கிறார்கள். பழைய குற்ற வழக்குகளில் இவரால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வெவ்வேறு குழுக்களாக செயல்பட்டு அவரை பழிவாங்க காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆம்ஸ்ட்ராங் மிகவும் செல்வாக்கு மிக்கவராகவே வலம் வந்துள்ளார்.. 24 மணி நேரமும் ஆதரவாளர்கள் நிழல் போல் உடனிருந்து வருவார்களாம்.

எனவே, ஆம்ஸ்ட்ராங் யாரை சந்திக்க விரும்புகிறாரோ அவரை மட்டும்தான் சந்தித்து பேசுவாராம்.. அந்த அளவில், தன்னை யாரும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாதவாறு கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருந்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கைது விசாரணை: 10 காவல் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்ற சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் விசாரணை தொடர்கிறது.
வீட்டு வாசலிலேயே ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி சாய்த்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்குடன் இருந்த 2 பேரின் உயிரும் மருத்துவமனையில் ஊசலாடி கொண்டிருக்கிறது.. மருத்துவமனை முன்பு ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க ராஜீவ் காந்தி அரசுமருத்துவமனையை சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆதரவாளர்கள்: இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர்.. "ஒரு மாநில அரசியல் கட்சி தலைவருக்கு என்ன மிரட்டல் இருக்க போகிறது? திமுக ஆட்சியில் எப்பவுமே இப்படித்தான்.. தலித் தலைவர்களுக்கு இப்படிதான் நடக்கிறது.. தேசிய கட்சியின் மாநில தலைவர்.. அண்ணாமலைக்கு இருக்கும் அத்தனை உரிமையும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் உண்டு.. ஆனால், முறையான பாதுகாப்பு தரப்பட்டுள்ளதா?" என்று கதறி அழுது கேள்வி எழுப்புகிறார்கள்.

கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் என்பவரின் சகோதரர் பாலு என்பவரும் சரணடைந்துள்ளதால், இந்த கொலை பழிக்கு பழியாக நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மேலும் அவருடன் சேர்ந்து ராமு, திருமலை, செல்வராஜ், அருள் என 8 பேர் சரணடைந்துள்ளனர். இதனால் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு: இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் உடல் நேற்றிரவு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதே, அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை வாயிலில் குவிய துவங்கிவிட்டார்கள்.. இப்போதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவரது ஆதரவாளர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. அதுபோலவே, பெரம்பூரிலுள்ள ஆம்ஸ்ட்ராங் வீடு அமைந்துள்ள பகுதியிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+