சென்னை அடையார் கேட் கிரவுன் பிளாசா ஹோட்டல் இடத்தில் 420 கோடியில் பாஷ்யம் கட்டும் பிரம்மாண்டம்
சென்னை: சென்னை டி.டி.கே சாலையில் உள்ள கிரவுன் பிளாசா (பார்க் செரட்டன்) ஹோட்டலை விலைக்கு வாங்கிய பாஷ்யம் குழுமம் அங்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளின் இரட்டை கோபுரங்கள் அமைக்க உள்ளது.இதற்காக சுமார் 420 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. ஏற்கனவே இந்த ஹோட்டலை விலைக்கு வாங்க சுமார் 700 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது. இப்போது அங்கு பல்வேறு சொகுசு வசதிகளுடன் 148 ஆடம்பர குடியிருப்புகள் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 26 மாடிகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் புகழ் பெற்ற போர்ட் கிளப் அருகில் அடையார் கேட் ஓட்டல் 38 வருடங்களாக இயங்கி வந்தது. இந்த ஹோட்டல் 287 அறைகளுடன் விருந்தினர்களுக்கு பிடித்த ஓட்டலாக இயங்கி வந்தது. தொழிலதிபர் டி.டி.வாசுவால் அடையார் கேட் ஹோட்டலாக இந்த ஹோட்டல் பலருக்கும் அறிமுகம் ஆனது. பின்னர், ஆடை ஏற்றுமதியாளர்களான கோயல்களால் இந்த நிறுவனம் வாங்கப்பட்டது.

அதன்பின் அங்கு ஐடிசி கிராண்ட் சோலா ஹோட்டலை (Grand Chola) கட்டிய பிறகு, இந்த ஹோட்டல் கிரவுன் பிளாசா சென்னை அடையார் பார்க்' (Crowne Plaza Chennai Adyar Park) என்று மறுபெயரிடப்பட்டது. முதலில் அடையார் கேட் ஹோட்டல்’ என்று அழைக்கப்பட்ட இந்த ஹோட்டல் பின்னர் கிரவுன் பிளாசா சென்னை அடையாறு பார்க்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஆனால் கடந்த 3 வருடம் முன்பு இந்த ஹோட்டலை சொகுசு ஹோட்டலாக மாற்றியமைக்க முன்னணி டெவலப்பரான ஸீப்ரோஸ் நிறுவனம் முடிவு செய்தது. ஆனால்,அதற்கான ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தது. இதனிடையேபின் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் குழு ஹோட்டலை விலைக்கு வாங்கி அடுக்குமாடி கட்ட விரும்பியது. இதற்காக பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில் சுமார் 700 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இதையடுத்து இந்த ஓட்டல் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதியுடன் மூடப்பட்டது. இது பலரையும் அப்போது வருத்தத்தில் ஆழ்த்தியது.
இதனிடையே ஓட்டலை வாங்கிய பாஷ்யம் குழுமம் அங்கு அடுக்குமாடி குடியிருப்பை கட்டுவதற்கான டிசைனை உருவாக்கி வந்தது. சென்னை போர்ட் கிளப் அருகில் உள்ள இந்த இடத்தில், சர்வதேச தரத்தில் வணிக வளாகங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான டிசைன்களை உருவாக்கி வந்தது. தற்போது அங்கு அடுக்குமாடியை கட்டும் பணியை ஆரம்பிக்க உள்ளது. இந்த அடுக்குமாடி சென்னையில் மிகவும் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஷ்யம் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சொத்தை வாங்கி ஏற்கனவே சுமார் 700 கோடி செலவு செய்த நிலையில், தற்போது கட்டுமானத்திற்காக 420 கோடியை முதலீடு செய்ய உள்ளது. இந்த அடுக்குமாடியில் 26 மாடிகள் இருக்குமாம். தரையின் கீழ்தளங்கள் மட்டுமே நான்கு மாடிகளாக இருக்குமாம். அதாவது தரைக்கு கீழ் நான்கு பேஸ்மெண்ட்டுகள் இருக்கும். மேலே ஒன்று முதல் 26 மாடிகள் இருக்குமாம். இங்கு கடைகள், உணவகங்கள், ஸ்பா, காத்திருப்பு ஓய்வறைகள் மற்றும் 148 குடியிருப்புகள் அமைக்கப்படுமாம். இந்த கட்டிடத்தின் 10வது மாடியில் இரட்டை அடுக்கு ஸ்சீலிங்குடன் கூடிய ஆடம்பரமான கிளப்ஹவுஸ் அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஓட்டல் கட்டிடம் அமைந்துள்ள 17,835 சதுர மீட்டர் பரப்பளவில் 1,59,392.85 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டிடம் அமைக்கப்படுமாம். மேலும், டாப் பிளோரில் இரண்டு விரிவான பென்ட்ஹவுஸ்கள் இருக்குமாம். அதுவும் ஒவ்வொன்றும் தோராயமாக 20,000 சதுர அடி பரப்பளவில் இருக்குமாம். இங்கு அமைக்கப்படும் சொகுசு குடியிருப்புகளை பொறுத்தவரை ஒரு சதுர அடிக்கு 35,000க்கு மேல் இருக்கும் என்கிறார்கள். அதாவது ஒவ்வொரு குடியிருப்பும் கண்டிப்பாக கோடிகளை தாண்டி விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஷ்யாமின் இந்த கிரவுன் பிளாசா, முழுமையாக வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் போது, மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணக்காரர்கள் பலருக்கும் பிடித்த இடமான போர்ட் கிளப் அருகில் இந்த அடுக்குமாடி அமைவதால் பெரிய வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications