Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை- பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னைக்கும்- பெங்களூருக்கும் இடையிலான பயண நேரத்தை பாதியாகக் குறைக்கும் லட்சியத்துடன் உருவாக்கப்பட்டு வரும் சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே (NE-7) திட்டம், தென்னிந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஒரு புதிய மைல்கல்லாக அமைகிறது.

chennai bangalore sriperumbudur

சென்னை - பெங்களூர் செல்ல தற்போது 5-6 மணிநேரமாக உள்ள நிலையில் அதை 2.5 முதல் 3 மணிநேரமாக சுருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ்வே தென்னிந்தியாவில் அமைக்கப்படும் முதல் 'கிரீன்ஃபீல்ட்' திட்டமாகும்.

ரூ 18 ஆயிரம் கோடி

இதன் மொத்த நீளம் 262 கிலோமீட்டர் வரை இருக்கும். தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலையை விட இது சுமார் 50 கி.மீ குறைவாகும். சுமார் ரூ.18,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இச்சாலையில், வாகனங்கள் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் செல்ல வடிவமைக்கப்பட்டுள்ளது.

71 கி.மீ. தூரம்

இந்த அதிவேக நெடுஞ்சாலை மூன்று முக்கிய மாநிலங்களை இணைக்கிறது. கர்நாடகாவில் 71 கி.மீ தொலைவுக்கு ஹோஸ்கோட், மாலூர், பங்கார்ப்பேட்டை வழியாகவும், ஆந்திரப் பிரதேசத்தில் 85 கி.மீ தொலைவுக்கு வி.கோட்டா, பலமனேர், சித்தூர் வழியாகவும், தமிழ்நாட்டில் 106 கி.மீ தொலைவுக்கு குடியாத்தம், அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர் வழியாகவும் இதன் பாதை அமைகிறது.

எக்ஸ்பிரஸ் வே இறுதி கட்டம்

இந்த எக்ஸ்பிரஸ் வே திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடக மாநிலப் பகுதியான ஹோஸ்கோட் முதல் பெத்தமங்களா வரையிலான 71 கி.மீ சாலை டிசம்பர் 2024-இலேயே திறக்கப்பட்டு, போக்குவரத்திற்காக பயன்பாட்டில் உள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் சுமார் 90% பணிகளும், தமிழ்நாட்டில் 80% பணிகளும் நிறைவடைந்துள்ளன. சில இடங்களில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் வனத்துறை அனுமதிகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதங்களால் பணிகள் தொய்வடைந்தன.

மக்கள் பயன்பாட்டுக்கு வரும்

எக்ஸ்பிரஸ்வேயின் பெரும்பாலான பகுதிகள் ஜூலை 2026-க்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சில இணைப்புச் சாலைப் பணிகள் அக்டோபர் 2026 வரை நீடிக்க வாய்ப்புள்ளது.

பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயணத்திற்கென பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. இந்தச் சாலையில் எந்தப் பகுதியிலும் நுழையவோ வெளியேறவோ முடியாது. குறிப்பிட்ட நுழைவு/வெளியேறும் வசதிகள் மட்டுமே இருக்கும்.

8 வழிச்சாலைக்கும் வழிவகுக்கும்

ஆரம்பத்தில் 4 வழிச்சாலையாக அமைக்கப்பட்டாலும், எதிர்கால வாகனப் பெருக்கத்தினைக் கருத்தில் கொண்டு, இதை 8 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் வசதியுடனும் கட்டப்பட்டுள்ளது. வனப் பகுதிகளைக் கடந்து செல்லும் இடங்களில், விலங்குகள் பாதுகாப்பாகச் சாலை கடக்க சிறப்பு மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வேகமான போக்குவரத்தை உறுதி செய்யும் பொருட்டும், பயணிகளின் பாதுகாப்பு கருதியும், சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை.

ரியல் எஸ்டேட்

இந்த விரைவுச்சாலையால் ஓசூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கு சொர்க்க பூமியாக இருக்கிறது. இதன் மூலம் அந்த பகுதியில் நிலத்தின் மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அதாவது இந்த பகுதிகளில் தற்போதைய மதிப்பை காட்டிலும் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒரு சதுர அடி எவ்வளவு?

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் ஒரு சதுர அடி ரூ 1200 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ 2000 முதல் ரூ 2800 வரை விற்பனை செய்யப்படுகிறது என்கிறார்கள். ஓசூரிலிருந்து பெங்களூருக்கு 35 கி.மீ. முதல் 60 கிலோ மீட்டர் தூரம் என்பதால் இங்கும் ரியல் எஸ்டேட் வர்த்தகம் கொடி கட்டி பறக்கிறது. பெங்களூரில் இடம் வாங்க முடியாதவர்கள் ஓசூரில் வாங்கி திருப்தி அடைகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+