மாஸான BMW கார்! இன்ப அதிர்ச்சி தந்த சென்னை ஐடி நிறுவனம்! மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற ஊழியர்கள்
சென்னை: சுமார் 10 ஆண்டுகளாக தன்னுடன் பணியாற்றிய 5 ஊழியர்களுக்கு பிஎம்டபிள்யூ சொகுசு காரை பரிசாக அளித்து, தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சென்னை ஐடி நிறுவன உரிமையாளர்!
Recommended Video
சென்னை ஓஎம்ஆர் சாலையில் கந்தன்சாவடி பகுதியில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் கிஸ்ஃபிளோ என்ற ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஐடி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் வருவாய் மற்றும் பிராஜெக்ட் மென்பொருள் துறையில் இது முக்கிய இடத்தில் உள்ளது.

சென்னை ஐடி நிறுவனம்
இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமாக சுரேஷ் சம்பந்தம் உள்ளார். இந்த நிறுவனம் தொடங்கி 10 ஆண்டுகளில் இந்த நிறுவனம் வருவாய் தொடர்பான மென்பொருள் துறையில் டாப் நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. அதில் சிஇஓ சுரேஷ் சம்பந்தம் தன்னுடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

பிஎம்டபிள்யூ சொகுசு கார்
இந்நிலையில், நிறுவனம் தொடங்கியது முதல் தன்னுடன் இணைந்து பயணித்து, நிறுவனத்தை டாப் இடத்திற்குக் கொண்டு செல்ல உதவிய 5 பேருக்கு சுமார் ஒரு கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ சொகுசு காரை சுரேஷ் சம்பந்தம் பரிசாக அளித்துள்ளார். ஆதி, விவேக், கெளசிக்ராம், பிரசன்னா, தினேஷ் ஆகிய ஐந்து பேருக்கு பிஎம்டபிள்யூ சொகுசு கார் வழங்கப்பட்டுள்ளது.

இன்ப அதிர்ச்சி
நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் விழா நடப்பதாகவும் அதற்கு குடும்பத்துடன் வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அதன்படி விழாவுக்கு குடும்பத்துடன் வந்த இவர்களிடம் திடீரென பிஎம்டபிள்யூ சொகுசு காரை பரிசாக அளித்து திக்குமுக்காடச் செய்துள்ளார் சுரேஷ் சம்பந்தம்! குடும்பத்தோடு வந்து காரை பெற்ற ஊழியர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர்.

பெருமிதம்
இவர்கள் 5 பேரும் நிறுவனம் தொடங்கியதில் இருந்து அனைத்து ஏற்ற இறக்கத்திலும் தன்னோடு பயணித்ததாகவும் வேறு நிறுவனங்கள் அதிக சம்பளம் தருவதாகக் கூறிய போதும் அங்குச் செல்லாமல் தன்னுடனேயே இணைந்து பயணித்ததாகவும் சுரேஷ் சம்பந்தம் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் அங்கு வந்த அனைவருக்கும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மகிழ்ச்சி
கல்லூரி படிப்பை முடித்து விட்டு அனுபவம் இல்லாமல் நிறுவனத்தில் இணைந்ததாகக் குறிப்பிட்ட காரை பெற்ற ஊழியர்களில் ஒருவரான விவேக், 10 ஆண்டுகள் ஒன்றாக உழைத்ததற்கு கார் பரிசாக அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகக் குறிப்பிட்டார். இந்த குறிப்பிட்ட பிஎம்டபிள்யூ மாடல் காரை வாங்க வேண்டும் என்பது தனது கனவாக இருந்ததாகவும் அதைத் தனது சிஇஓ நனவாக்கி உள்ளதாகவும் மற்றொரு ஊழியரான ஆதி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications