சென்னையில் இன்று மின்சார ரயில்கள் ரத்து.. கடற்கரை- தாம்பரம் இடையே ரயில்கள் 10 மணிநேரம் ஓடாது
சென்னை: பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இன்று காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மொத்தம் 10 மணிநேரம் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதையடுத்து மக்களின் வசதிக்காக சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதோடு, கூடுதல் பஸ்களும் பயணிக்க உள்ளது.
சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து அருகே உள்ள மாவட்டங்களுக்கும், அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என தினமும் ஏராளமானவர்கள் மின்சார ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் அவ்வப்போது தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியின் காரணமாக அவ்வப்போது ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
அந்த வகையில் இன்று தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயங்கும் மின்சார ரயில்கள் இன்று காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மொத்தம் 10 மணி நேரம் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட உள்ளது.
இதனால் பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி காலை 8.35, 9.38, 10.10, 10.40, 11.20, மதியம் 12 மணி, 1.05, 1.30, 2.30, 3.10, 3.45, மாலை 4.10, 4.30, 4.50, 5.10, 5.50 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரத்துக்கு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது.
மறுமார்க்கமாக பல்லாவரத்தில் இருந்து காலை 9.35, 10.35, 11.05, 11.35, மதியம் 12.10, 12.55, 1.55, 2.25, 3.20, மாலை 4.00, 4.40, 5.05, 5.20, 5.40, 6.05, 6.40 மணிக்கு சிறப்பு ரயில்கள் சென்னை கடற்கரைக்கு இயக்கப்பட உள்ளது. அதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து பிற இடங்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு இரவு 7 மணிக்கு மீண்டும் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை தொடங்க உள்ளது. அதேவேளையில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும். இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications