புஹாரியிலா இப்படி? சென்னையில் பிரபல ஹோட்டலில் நடந்த ஷாக் சம்பவம்.. குவிந்த அதிகாரிகள்.. திடுக்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் இருக்கும் புஹாரி ஹோட்டலில் நடந்த சம்பவம் ஒன்று அங்கே செல்லும் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இருக்கும் பிரபல ஹோட்டல்களில் ஒன்று புஹாரி ஹோட்டல். அசைவ உணவுகள், பிரியாணி வகைகளில் இந்த ஹோட்டல் மிகவும் பிரபலம். தினமும் பல ஆயிரம் பேர் இந்த ஹோட்டல்களில் சாப்பிடுவது வழக்கம்.

சென்னையில் புஹாரி ஹோட்டல் கிளைகள் பல இடங்களில் உள்ளது. அதேபோல் சென்னைக்கு வெளியிலும் பல இடங்களில் புஹாரி ஹோட்டல் உள்ளது.
முக்கியமாக செங்கல்பட்டில் சில கிளைகள் உள்ளன. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் இருக்கும் புஹாரி ஹோட்டலில் நடந்த சம்பவம் ஒன்று அங்கே செல்லும் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஊரப்பாக்கம் ஹோட்டல்: நேற்று அந்த ஹோட்டலில் சாப்பிட்ட மக்கள் பலருக்கும் திடீரென மயக்கம் ஏற்பட்டு உள்ளது. பலருக்கும் இங்கே சாப்பிட்ட பின் வாந்தி பிரச்சனையும் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கே சாப்பிட பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அங்கே சோதனை செய்ததில் பல இடங்களில் உணவு பாதுகாப்பு இன்றி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
முக்கியமாக சிக்கன், மட்டன் இருந்த இடங்கள் சுத்தம் இன்றி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உணவுத்துறை அதிகாரிகள் ஹோட்டல் ஊழியர்களை சரமாரி விமர்சனம் செய்தனர்.,
இதையடுத்து ஹோட்டலுக்கு 3 நாட்கள் சீல் வைத்தனர். கடையை சுத்தம் செய்ய வேண்டும். பொருட்களை மாற்ற வேண்டும். இதன்பின் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அனுமதிக்க விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் திறக்கலாம்.
அதுவரை கடையை திறக்க கூடாது. பார்சல் விற்பனைக்கும் அனுமதி கிடையாது. தண்ணீர் தேங்கும் பகுதிகளை சரி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
உணவு சோதனை: இங்கே இருக்கும் உணவும் சோதனைக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது. அதிகாரிகள் மூலம் உணவு சோதனைக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது. வாந்தி, பேதி ஏற்பட்டது எதனால் என்பதை சோதனை செய்வதற்காக உணவு ஆய்வுக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications
