Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேங்காய் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது.. சென்னையில் வாயடைத்து போக வைக்கும் இளநீர் விலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தேங்காய் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.தேங்காய் விலை மொத்த மார்க்கெட்டில் வேகமாக உயர்ந்து வருவதால், நல்லெண்ணைய் விலையை விடவும் தேங்காய் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் லிட்டருக்கு ரூ.160 வரையிலும், கிலோவுக்கு ரூ.180 வரையிலும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 440 ரூபாய் அளவிற்கு விற்பனையாகிறது.

தமிழகத்தில் 4 லட்சத்து 47 ஆயிரத்து 471 ஹெக்டேர் அளவிற்கு தென்னை பயிர் பயிரிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிலேயே அதிகமாக கோவை மாவட்டத்தில் 88,467 ஹெக்டேர் பரப்பளவும், அதற்கு அடுத்தப்படியாக திருப்பூர் மாவட்டத்தில் 58,550 ஹெக்டேரும் தென்னை பயிர் உள்ளது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், கோபால்பட்டி, பழநி, நிலக்கோட்டை, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 31,000 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.

Chennai Coconut Oil Price Why Has Coconut Oil Price Risen to 160 per Liter in 2 Months

தென்னை விளைச்சல்

இதுதவிர திருச்சி, கரூர், ஈரோடு, தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட தமிழ்நாட்டின் அனைத்த மாவட்டங்களிலும் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்படுகிறது . தேங்காய் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 3வது இடத்தில் இருக்கிறது. பல வெளி மாநிலங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து தான் தேங்காய் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. பொள்ளாச்சி, உடுமலை, நெகமம், மடத்துக்குளம் உள்பட தேங்காய் அதிகம் விளையும் பகுதிகளில் அதிக அளவில் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்த தொழிற்சாலைகளில் தேங்காய்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் வகையில், தேங்காய்களை உலர்த்தி கொப்பரைகளான பின்பு, அதை தேங்காய் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

தேங்காய் விலை

இந்நிலையில் தேங்காய் விளைச்சல் பாதிப்பு காரணமாகவும், தேவை அதிகம் இருப்பதன் காரணமாகவும், தமிழ்நாட்டில் தேங்காய் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. மொத்த மார்க்கெட்டிலேயே ஒரு கிலோ ரூ.70-ஐ தாண்டி விற்பனையாகிறது. வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது.

தேங்காய் எண்ணெய் விலை

இது ஒரு புறம் இருக்க, தேங்காய் எண்ணெய் விலையும் மறுபக்கம் கடுமையாக உயர்ந்துவருகிறது. தேங்காய் எண்ணெய்க்கு மூலப்பொருளான கொப்பரைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதன் காரணமாகவே அதன் விலை தாறுமாறாக உயருகிறது. கொப்பரைத் தேங்காய் தட்டுப்பாட்டால், தேங்காய் எண்ணெய் விலை கடந்த 2 மாதங்களில் மட்டும் லிட்டருக்கு ரூ.160 வரையிலும், கிலோவுக்கு ரூ.180 வரையிலும் உயர்ந்து உள்ளது.

எண்ணெய் வியாபாரிகள் விளக்கம்

இதுபற்றி வியாபாரிகள் கூறும் போது, கடந்த மே மாதம் தொடக்கத்தில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ரூ.234-க்கும், ஒரு கிலோ ரூ.260-க்கும் விற்பனை செய்து வந்தோம். ஆனால் தற்போது ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ரூ.396-க்கும், ஒரு கிலோ ரூ.440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது சில இடங்களில் விலை சற்று அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை இளநீர் கடைகளில் ரூ.40 முதல் ரூ.70 வரையில் விற்கப்பட்ட இளநீர், தற்போது ரூ.60 முதல் ரூ.80 வரையிலும், சில இடங்களில் இளநீர் ரூ.90-க்கும் விற்பனையாகிறது. இளநீர் விலை, தேங்காய் விலை, தேங்காய் எண்ணெய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+